பிஸ்டல்களை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்...!

சுய பாதுகாப்புக்காக ரிவோல்வருக்கு பதிலாக பிஸ்டல்களை வழங்குமாறு புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அது தொடர்பாக, கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மேலும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உள்ள வரப்பிரசாதங்களுக்கு அமைய தனிப்பட்ட பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கியை கோர முடியும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், நாடாளுமன்ற சேவை காரியாலயத்தில் இதற்காக கோரிக்கையை விடுக்க முடியும் எனவும், அது நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்படும்.

நாடாளுமன்ற செயலாளர் அந்த கோரிக்கைகளை உறுதிப்படுத்தி பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பது சாதாரண முறைமையாக உள்ளது.

இதனையடுத்தே பாதுகாப்பு செயலாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் கோரிக்கை விடுத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கியொன்று வழங்கப்படுகிறது.

இந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் 61 புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 35 பேர் தனிப்பட்ட பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை கோரியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -