கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு - நாளை ஓட்டமாவடியில் ஹர்த்தால் அனுஸ்டிப்பு

எம்.ரீ.எம்.பாரிஸ்-

கிழக்கு முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை புதன் கிழமைஓட்டமாவடியில் கர்த்தால் பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினைமேற்கொள்ளவுள்ளதாக கல்குடா பிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம்தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கீழ் இயங்கும் ஓட்டமாவடி பாத்திமாபாலிகா மகா வித்தியாலயம்,மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்ஆகிய பாடசாலைகள் மஹிந்த சிந்தனை திட்டத்தின் ஆயிரம் பாடசாலைநிகழ்ச்சி உள்வாங்கப்பட்டு மஹிந்தோய விஞ்ஞான ஆய்வு கூடம் எனபெயரிடப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.

இவ் ஆய்வு கூடமானது நாட்டின் தெரிவு செய்யப்பட்ட மாகாணம் மற்றும்தேசிய பாடசாலைகளில் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில்நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக விஞ்ஞான ஆய்வு கூட அறைகள்,கணிதகற்கை அறை, தகவல் தொழில் நுட்ப அறைகள்,கனிணி கூடம் என சகலவசதிகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டு அனைத்து வளங்களையும்உள்ளீடுகளாக கொண்டுள்ளது.

இதனை கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷபல மாவட்டங்களுக்கு விஜயம் செய்து திறந்து வைத்தார்.

பூர்த்தி செய்யப்படாமல் இருத்த கட்டிடங்கள் மற்றும் புதிய ஆட்சி மாற்றத்தின்பின்னர் “விஞ்ஞான ஆய்வு” கூடமாக பெயர் மாற்றப்பட்டு திறக்கப்பட்டுவருகின்றது.

இதற்கமைவாகவே இவ் ஆய்வு கூடம் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தின் குறிந்தஇரு பாடசாலைகளில் ஆய்வு கூடத்தினை திறப்பதற்கான நடவடிக்கையினைகிழக்கு மாகாண கல்வி பணிமனை மேற்கொண்டது.

கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரீ.எம்.நிஸாம் அவர்களின் உத்தரவுக்குஅமைவாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அவர்களை கொண்டுதிறக்குமாறு வலயக்கல்வி பணிப்பாளர் ஊடக குறிந்த பாடசாலையின்அதிபர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இரு பாடசாலைகளின் பாடசாலை அபிவிருத்தி சங்கங்கள் முதலமைச்சரைகொண்டு திறப்பதற்கு விரும்பாத நிலையிலும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள்பாடசாலை அதிபர்களினால் நிர்பந்தமான நிலையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

“எமது பிரதேச அபிவிருத்தியில் எவ்வித பங்கும் வகிக்காத இந்த மாகாணமுதலமைச்சர் ஏன் எமது பாடசாலை கட்டிடத்தினை திறக்க வேண்டும்? யார்பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது” முதலமைச்சா் மீது விமர்சனம்எழுத்துள்ளது.

இது பற்றி உரிய முறையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,மாகாணகல்விப்பணிப்பாளர்,வலயக்கல்வி பணிப்பாளர் ஆகிய உயர் மட்டஅதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் இது விடயத்தில்அவர்கள் எடுக்காமை அலச்சிய போக்கினை கையாண்டமைக்காக நாளை புதன்கிழமை கட்டிட திறப்பு விழா அன்று முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்புதெரிவித்து பூரண கர்த்தால் அனுஸ்டிப்பினை மேற்கொள்ளவுள்ளதாக கல்குடாபிரதேச அபிவிருத்தி குழுக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட செய்தி தொடர்பாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு இம்போட்மிரருக்குக் கருத்துத் தெரிவிக்கையில்:



நாளை காலை முதல் மதியம் வரை வாழைச்சேனை, ஓட்டமாவடிப் பகுதிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் உத்தியோகபூர்வ விஜையம் மேற்கொண்டு அங்குள்ள பாடசாலைகளான..

தியாவட்டவான் அறபா வித்தியாலயத்திற்கு போட்டோக்கொப்பி மெசின் வழங்கவும், வாழைச்சேனை ஹைறாத் வித்தியாலயத்திற்கு தளபாடங்கள் வழங்கவும், வாழைச்சேனை அந்நூர் மஹா வித்தியாலயத்திற்கு சோபா செற் வழங்கவும், ஓட்டமாவடி ஸாஹிரா வித்தியாலயத்திற்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கவும் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மத்திய கல்லூரியி, மீராவோடை ஹிதாயா மகாவித்தியாலயம் ஆகியவற்றின் பயிற்ச்சி நிலையங்கள் திறக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கெளரவ அதிதியாக கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோ வருகை தரவிருப்பதனை தடுக்க வேண்டும் கல்குடா தொகுதிக்குள் இருக்கும் அரசியல்வாதி தனிக்காட்டு ராஜாவாக செயல்படவேண்டும் என்ற சிந்தனையில் அவரின் ஆதரவாளர்களினால் பொய்யாக விடப்பட்ட அறிக்கையே ஹர்த்தால் என்பது என்று கூறினர்.

மேற்குறிப்பிட்ட அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மட்டக்களப்பு மாவட்ட பாதுகாப்புப் படை மேலதிக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உடனடியாக இச்செய்தி தொடர்பாக ஆராயுமாறு கேட்டுக்கொண்டதுடன் அபிவிருத்திக்குத் தடையாகவிருக்கும் நபர்களைக் கைது செய்து சட்டத்தின் முன்னிறுத்தவும் அதற்கான முழு ஏற்பாடும் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -