எம்.ஏ.றமீஸ்-
விவசாய அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எஸ்.லாபீரின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணசுகாதார அமைச்சராகப் பதவியேற்ற ஏ.எல்.எம்.நசீரை வரவேற்றுப் பாராட்டிக்கௌவரவிக்கும் வைபவம் நேற்றிரவு(26) காத்தான்குடி கடாபி ஹோட்டலில் இடம்பெற்றது.
தேசிய அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத் தவிசாளரும் விவசாய அமைச்சரின்இணைப்புச் செயலாளருமான எஸ்.லாபீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின்போதுகிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்சில்உள்ளிட்ட அட்டாளைச்சேனைப் பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள்பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது புதிதாக பதவியேற்ற கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீருக்குவிவசாய அமைச்சரின் இணைப்புச் செயலாளரினால் நினைவுச் சின்னம் வழங்கிக்கௌரவிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் குறிப்பிடுகையில்,தனக்குக் கிடைத்த சுகாதார அமைச்சின் மூலம் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவினசமூகங்களுக்கும் தன்னாலான சேவைகளை தன்னலம் பாராமல் வழங்கவுள்ளேன்.அதுமட்டுமல்லாமல் கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையை மேலும் விருத்தி செய்துஅனைத்து மக்களும் சுகாதாரத்துறை சேவையினைப் பெற்றுக் கொள்ள வழிஏற்படுத்துவேன்.
தனக்கு சுகாதார அமைச்சினை வழங்கி அட்டாளைச்சேனைப் பிரதேசத்தினையும்குறிப்பாக அம்பாறை மாவட்டத்தினையும் கௌரவப்படுத்திய ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவருமான ரவூப் ஹக்கீமுக்கும் இக்கட்சியின்அனைத்துத் தரப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றேன். நான்சுகாதார அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்றதனை மன நிறைவுடன் ஏற்றுவாழ்த்துக்களையும் வரவேற்பினையும் வழங்கும் அனைவருக்கும் எனது நன்றியறிதலைதெரிவிப்பதில் ஆனந்தம் அடைகின்றேன் என்றார்.


