தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டும் - நிதியமைச்சர் ரவி

அடுத்தாண்டு தை மாதத்தில் இருந்து நாட்டின் தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்தி, இலங்கையர்களுக்கான இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளன.

அதற்கமைய, தற்போது பாவனையில் உள்ள தேசிய அடையாள அட்டை, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையாக மாற்றப்பட்டு விநியோக்கிப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தனியாள் அடையாளத்தினை விரைவாக அடையாளப்படுத்திக்கொள்ள, இவ் இலத்திரனியல் அடையாள அட்டை மிக அதிகமாக உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -