அபிவிருத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் 18 மில்லியன் ஒதுக்கீடு...!

ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்-

ம்பாறை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்குட்ட விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்திற்கு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அமைச்சினூடாக 18 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

முதற்கட்ட மைதான அபிவிருத்தியின் பொருட்டு சாய்ந்தமருது, கல்முனைக்குடி பீச் றோட், மருதமுனை, கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய விளையாட்டு மைதானங்களுக்கு 2 மில்லியன் ரூபா வீதம் 14 மில்லியன் ரூபாவும், பொத்துவல் மத்திய கல்லூரி, பொத்துவில் பசறிச்சேனை ஆகிய விளையாட்டு மைதானங்களுக்கு 1.5 மில்லியன் ரூபா வீதம் 3 மில்லியன் ரூபாவும், இறக்காமம் விளையாட்டு மைதானத்திற்கு 1 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பணிப்புரைக்கமைவாக இம்மைதானங்களின் அபிவிருத்திற்கான நிதி ஒதுக்கீட்டுக்கான கடிதத்தினை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் வீ.எஸ்;.எஸ்.விஜயரத்ன அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித வீ. வணிகசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

முதற்கட்டமாக கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, பொத்துவில், இறக்காமம், கல்முனை தமிழ் ஆகிய  பிரதேச செயலகங்களுக்குட்பட்ட விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையிலான உயர்மட்ட குழுவினர் அண்மையில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டதை முன்னிட்டு இந்நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -