நிலங்கள் மீண்டும் தமிழர்களுக்கே ஒப்படைக்கப்படும்: மீனவர் பிரச்சினைக்கு சுமூக முடிவு : இந்தியாவில் ஹக்கீம்(VIDEO)

சாகுல் ஹமீட் (இந்திய) -

ல்லை தாண்டி மீனவர் பிரச்சினைக்கு அபராதம் விதிக்கப்போதாக வெளிவந்துள்ள செய்தியை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டமென்றும், அது சுமூகமாக முடிக்கப்பட்டுவிடும் என்றும் கூறிய இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம், போர்க்குற்றம் புரிந்தோர் மீது நடவடிக்கை உறுதி என்றும் குறிப்பிட்டார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் இலங்கை அமைச்சர் ஹக்கீம் இன்று சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது:

சென்னையில் இன்று நடைபெறும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் பவள விழாவில் பங்கேற்று உரையாற்றுவதற்காக வந்துள்ளேன்.

இலங்கை–இந்தியா அரசு இடையே நல்ல சுமூகமான உறவு உள்ளது. தொடர்ந்து அது நல்ல முறையில் நீடிக்க வேண்டும் அதற்காக இருநாட்டு அரசுகளும் உரிய முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதாகவும் அப்படி பிடிப்பவர்கள் கைது செய்யப்படுவதாகவும் பிரச்சினைகள் உள்ளன.

தற்போது இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கையில் மீன் பிடித்தால் அவர்களை கைது செய்வதோடு ரூ. 15 கோடி அபராதம் விதிக்கப்படுவதாக இலங்கை அதிகாரி பேசிய செய்திகள் வெளிவந்துள்ளன. இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தி;ல் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல சுமூக உறவை பாதுகாக்க இலங்கை அரசு முழு முயற்சி மேற்கொள்ளும்

இந்திய - இலங்கை இரு நாடுகளுக்கிடையோயான சுமூக உறவு என்பது பாராம்பரிய அடிப்படையிலாவது அதற்கு பழுது ஏற்படாத வகையில் இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகள சுமூகமான முறையில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக விரைவில் நல்ல தீர்வு ஏற்படும்.

தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட இடங்களை மீண்டும் தமிழர்களுக்கே திருப்பி தர சிறிசேனா அரசு உறுதியாக உள்ளது. தற்போது ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடங்கள் பகிர்ந்து அளிக்கப்படும்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இலங்கையில் தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவர் ஆகி உள்ளார். இது ஆரோக்கியமான அரசியல். அவருடன் கலந்து பேசி பறிக்கப்பட்ட இடங்கள் திருப்பி ஒப்படைக்கப்படும்.

இலங்கை போர் குறித்து நடக்கும் உள்நாட்டு விசாரணையில் போர்குற்றம் நடந்திருப்பதாக விசாரணைக்குழு அறிக்கை சமர்பித்துள்ளது. இதில் இலங்கை அரசு உறுதியாக நடவடிக்கை மேற்கொள்ளும். இதில் எந்தவித சந்தேகமும்இல்லை.

போர்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக மீனவர்கள் பிரச்சனையில் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும். இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு பாதுக்கப்படும் வகையில் நடவடிக்கைகள் இருக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -