சிரிலிய சவிய இடை நீக்கம்; மூவர் மரணம் - ஷிரந்தியின் வாக்குமூலம்!

சிரிலிய சவிய வங்கி கணக்கினை இடைநீக்கம் செய்தமையினால், அவ் அமைப்பில் உதவி பெற்றுக்கொண்டிருந்த மூவர் தற்போது வரையில் உயிரிழந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபகச் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்கும் போது இதனை தெரிவித்துள்ளதாக ஷிரந்தி ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் ஊடக அறிக்கை ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிரிலிய சவிய தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ராஜபக்சவின் மனைவி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ் அமைப்பு உள்நாட்டு, வெளிநாட்டு, நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் மூலம் செயற்படுவதாகவும், அதன் நடவடிக்கைகளுக்காக அரசாங்க பணம் அல்லது சொத்துக்கள் எதனையும் பயன்படுத்தவில்லை என ஷிரந்தி ராஜபக்ச நிதி குற்ற விசாரணை பிரிவில் குறிப்பிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றங்கள் முற்றிலும் போலியானது.

வங்கி கணினிகளின் அமைப்பு முறை ஷிரந்தி ராஜபக்ச உட்பட அனைத்து அதிகாரிகளின் தேசிய அடையாள அட்டை இலக்கங்கள் உள்ளடக்கப்படும் போது தவறுதல்கள் இடம்பெற்றுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிரிலிய சவிய அமைப்பிற்கான காசோலையில் கையொப்பமிட்டது பொய்யான நபர் அல்ல இன்னமும் அங்கு சேவை செய்யும் உண்மையான மூன்று நபர்களே என மேலும் அவ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -