வடபுலத் முஸ்லிம்களின் தடையற்ற மீள்குடியேற்றத்துக்கான ஆதரவுக்குரல் - பஷீர் சேகுதாவூத் பேசுகிறார்

ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்-

மது நாட்டில் முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு தனி அரசியல்கட்சி ஊடாகவும் முஸ்லிம் சமூகத்தின் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதியப்படுத்த முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் செல்வாக்குள்ள அரசியல் கட்சிகள் தனிநபர்கள் மற்றும் குடிமைச்சமூகமும் ஒன்றிணைந்து ஒரு கூட்டு முன்னணியாகப் பரிணாமம் பெற்று எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பங்கேற்க வேண்டிய அவசர, அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு – ஏறாவூர்- மௌலானா ஆற்றங்கரை பூங்காவில் 30.05.2015 நேற்றிரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே பஷீர் சேகுதாவூத் இதனைக் குறிப்பிட்டார்.

'வடபுலத்து முஸ்லிம்களின் தடையற்ற மீள்குடியேற்றத்திற்கான ஆதரவுக்குரல்' எனும் கருப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் ஏறாவூர் நகர சபை முன்னாள் தவிசாளர் எம்ஐஎம் தஸ்லிம், பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் தலைவர் ஏசீஎம் சயீட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பஷீர் சேகுதாவூத் இங்கு மேலும் பேசுகையில்... முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தற்போது ஆழமான நடவடிக்கைகளற்ற ஒருபிரசார நெடியோடு மாத்திரம் செயற்படுகின்ற நிலைக்குவந்து விட்டது. முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் சமூக அக்கறை என்பது பிரசார உக்திக்காக மாத்திரமே கையாளப்படுகிறது.

குறிப்பாக வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்ற விடயத்தில் பௌத்த மதத்தின் பெயரில் உருவெடுத்துள்ள ஒரு தீவிரவாதக்குழு முஸ்லிம்களுக் கெதிராக மேற்கொள்ளும் வெறுப்புப் பிரசாரத்தில் வெற்றிகண்டுள்ளது. எனினும் நாம் உணர்ச்சிக்கு அடிமைப்பட்டவர்களாக செயற்படக்கூடாது இது ஆபத்தானது.

வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம்கள் அத்து மீறிக் குடியேறியிருக்கிறார்கள் என்ற எண்ணக்கரு ஏனைய சிங்கள மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டுவிட்டது. இந்த சூழ்நிலையில் முஸ்லிகள் ஒருமித்து குரல் கொடுக்கவேண்டும்.

அன்று அஷ்ரபுக்கு எதிராக வீர விதான என்ற தீவிரவாதக் குழு செயற்பட்டதுபோல அழுத்கம தாக்குதலுக்கு பொது பலசேன வில்பத்து விடயத்தில் ராவண பலய குழு வரிந்துக்கட்டிக்கொண்டு நிற்கிறது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் பல்வேறு சிறிய கட்சிகளுடனும் இணைந்தோம். இப்போது 20ஆம் சட்ட திருத்தத்திற்கும் அக்கட்சிகளே தேவைப்படுகின்றன.

குறிப்பாக ஆட்சியைத் தீர்மானிக்கும் விடயத்;தில் முஸ்லிம் சமூகம் உட்பட சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவினை இல்லாமற் செய்வதே இச்சட்ட திருத்தித்தின் பிரதான நோக்கமாக்க காணப்படுகிறது.

இதனால்தான் றவூப் ஹக்கீமுக்கும் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. எனினும் முஸ்லிம்கள் அரசியல் ஞானத்துடன் செயற்படவேண்டும்.

எனவே எதிர்காலத்தில் முஸ்லிம் சமுகத்தை சரியாக வழிநடாத்துவதற்கு எமது அரசியல் கட்சிகள் தனித்தனி வழியே செல்வது சாதகமாக அமையாது.கட்சிகள் வௌ;வேறாக இருந்தாலும் கூட்டு முன்னணியாக இணைந்து சமுகத்திற்காகக் குரல் கொடுப்பதுடன் எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலையும் கூட்டு முன்னணியாகவே எதிர்கொள்ளவேண்டும் என்றார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -