ந.குகதர்சன்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் – கல்குடாப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல்-கிம்மா நிறுவனம் நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு பட்ட சமூகப் பணிகளை செய்து வருகின்றது.
அதன் தொடரில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை பிரதேசத்தில் இனம் காணப்பட்ட சில வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை சனிக்கிழமை வழங்கியது.
காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அடையாளம் காணப்பட்ட வறிய குடும்பங்களுக்கான கேஸ் அடுப்புக்கள், மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான தோணிகள், தூரப் பிரதேசத்திலிருந்து தங்களது கற்றல் நடவடிக்கைகளுக்காக நடை வழியாக வரக்கூடிய மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.எம்.எஸ்.ஹாறூன் (ஸஹ்வி), பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபிர், நிறுவனத்தின் செயலாளர் ஐ.எம்.றிஸ்வின் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்கள், தொண்டர்கள், மற்றும் பாடசாலையின் சிரேஷ்ட பிரிவுக்கான அதிபர், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.கே.எம்.சர்ஜுன், பிரதேச பள்ளிவாயல்களின் தலைவர்கள், பிரதேசத்தின் மாதர் அமைப்புக்களின் தலைவிகள் உட்பட பலரும் கலந்து கொண்டு பொருட்களை வழங்கி வைத்தனர்.





