ஆக்கம் என்பது இதுதானா?


(எஸ்.எல். மன்சூர்)


ஆக்கம் என்பது ஒன்றை உருவாக்குவது என்பதாகக் கூறுவர். ஆக்கச் சிந்தனை சிற்பிகளாக மாணவர்களை மாற்றுகின்ற ஒரு செயற்பாடாகவே இன்றைய கற்றல் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்றும் கூறப்படுகின்றது. அந்த அடிப்படையில் இன்றைய கல்விப்புலத்தில் பாடசாலைக் கலைத்திட்டத்தில் வகுப்பறையில் மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிக்க வேண்டும். அதற்கான உபகரணப் பயன்பாடுகள் அவசியமாகும். ஒருவிடயத்தை மாணவனுக்கு கற்பிக்கின்றபோது உண்மைப் பொருட்களைக் காண்பித்து கற்பிக்க வேண்டும். அதுகிடைக்காத சந்தர்ப்பத்தில் மாதிரிப் பொருள்களைக் காட்சிப்படுத்தி கற்பிக்கின்றபோது அது மனதில் பதியும் என்பார்கள். அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியரும் கற்றலில் கவனம் செலுத்துதல்  வேண்டும். தற்கால கற்;;றல் கற்பித்தல் செயன்முறையானது தேர்ச்சிமையக் கலைத்திட்டமாகப் பரிணமித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் வெண்;;;ணிறச் சோக்கும், கரும்பலகையுடனும் கற்பிக்கின்ற நிலைமாறி மகிழ்ச்சிகரமான கற்றலை மேற்கொள்;;ளும் ஆர்வத்துடன் மாணவர்களும், ஆசிரியரும் இணைந்து பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் உதவுதல் வேண்டும். 

அந்த அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் கற்றலை மேம்படுத்தும் நோக்குடன் ஆசிரியர்களது உதவியுடன் பல்வேறு ஆக்கப் பொருட்களும் உருவாக்கப்பட்டு வகுப்பறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை சிறப்புக்குரியதாகும். அந்த வகையில் அக்கரைப்பற்று அரசினர் ஆண்கள் வித்தியாhலயத்திலுள்ள தரம் 3 மாணவர்களால் ஆக்கப்பட்ட பல ஆக்கங்கள் அப்பாடசாலைக்கு சென்றபோது காணக்கூடியதாக இருந்தது. கழிவுப் பொருட்கள், மற்றும் பயன்படுத்தப்படவே முடியாத பொருட்களும் அழகிய ஆக்கங்களாக வடிவமைத்துள்ளமை பார்ப்போரை பிரமிக்கச் செய்துவிடுகின்றது. கற்றல் என்பது மாற்றத்தை நோக்கிய ஒரு பயணமாகும். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது மூத்தோர் மொழியாகும். இன்றைய மாணவர்களை நாளை யுகபுரிஷர்களாக மாற்றம் பெறவைப்பதற்கு கல்வி ஒன்றுதான் சிறந்தது. தரமான கல்வியினால் தரமான மாணவர்களை உருவாக்கலாம். என்பதற்கு இப்பாடசாலையின் அதிபரும், ஆசிரியர்களும் உதாரணமாக அமைந்துள்ளார்கள். 

(நீங்கள் படத்தில் காண்பது கழிவுப் பொருட்களினால் ஆக்கப்பட்டுள்ள உருவங்களாகும். சொபிங்பேக், பறவையின் இறகுகள், வெள்ளைப்பூண்டின் கோது, தீப்பெட்;டியின் குச்சிகள் என்பனவாகும்)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :