ந.குகதர்சன்-
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தனது மாகாணத்திலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் பிரதேச செயலகம் தோறும் பல்வேறு வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றது.
இதனடிப்படையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விதவைகள், மாதாந்த பொது சன உதவி பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரது வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் மானிய அடிப்படையில் உதவித் தொகை வழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருன்மொழி, ஓட்டமாவடி மற்றும் ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களின் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம்.அலியார், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஆர்.குலேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கி வைத்தனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட எட்டு பயனாளிகளுக்கு முப்பதாயிரம் ரூபாய் வீதம் இரண்டு இட்சத்து நாற்பதாயிரம் ரூபா பெறுமதியான காசோலை வழங்கி வைக்கப்பட்டது.(ந)




