றிசாத் பதியுத்தீனுடன் சுவிட்சலாந்து நாட்டின் குழுவினர் சந்திப்பு!

அஸ்ரப் ஏ சமத்-
சுவிஸ் நாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிடுவதற்காகவும் இலங்கையின் உற்பத்திப் பொருட்களை சுவிஸ் நாட்டில் ஏற்றுமதி செய்வதற்கும் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியுத்தீனுடன் இன்று சுவிட்சலாந்து நாட்டின் குழுவினர் சந்தித்து பேசினார்கள். 

இச் சந்திப்பு வர்த்தக கைத்தொழில் ;அமைச்சில் நடைபெற்றது. இச் சந்திப்பில் சுவிஸ் நாட்டின் தூதுவர் கென்ஸ் வோக்கர் நெட்கூன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.   அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தலைமையிலான அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் - சுவிஸ் நாடுகளுக்கிடையே பரிமாறப்படுகின்ற பொருளாதார விடயங்கள் பற்றியும் இங்கு கலந்துரையாடினார்கள்.

இச் சந்திப்பில் அமைச்சர் றிசாத் சுவிஸ் நாட்டு முதலீட்டாளார்களுக்கு இலங்கையில் முதலிடுவதற்கு தடையாக உள்ள சகல தடைகளையும் அரசுடன் பேசி அதனை தீர்த்து தருவதாகவும் உறுதியளித்தார். 

அத்துடன் சுவிஸ் நாடு இலங்கையில் கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் தொழிற்பயிற்சி நிலையங்களை அமைத்து வட கிழக்கு இளைஞர்களுக்கு உதவுவதையுமிட்டும் அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமந்திரி ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் தலைமையில் நல்லாட்சியில், புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தேசிய அரசாங்கம் உள்ளது. அடுத்த இரு மாதங்களுக்குத் தேர்தலின் நிலையானதொரு  தேசிய அரசாங்கமே ஏற்படுத்தப்படும். இதனையிட்டு சகல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தமது முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். 

அத்துடன் யுத்தம் ஓய்ந்துள்ள வட கிழக்கு பிரதேசங்களிலும் முதலிடுமாறும் அமைச்சர் வேண்டிக் கொண்டார். 

29 மேற்பட்ட கைத்தொழில் பேட்டைகள் இலங்கையில் உள்ளன. அவற்றை சுவிஸ் நாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வரும்படியும் அவ் வளங்களை பாவிப்பதற்கும் மற்றும், இலங்கை உற்பததியளர்களை சுவிஸ் நாட்டில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கும் உடன்பாடு காணப்பட்டது.

ஏற்கனவே சுவிஸ் அரசாங்கம் இலங்கையில் தேசிய அபிவிருத்தி வங்கிக்கு 10 மில்லியன் அமேரிக்க டொலரை முதலிட்டுள்ளமை பற்றியும் சுவிஸ் தூதுவர் அங்கு விளக்கமளித்தார். 

இங்கு கருத்து தெரிவித்த அமைசச்ர் றிசாத் பதியுத்தீன் இந்தியாவில் 4500 பொருட்கள் பாக்கிஸ்தானிலிருந்து 4600 பொருட்கள் இலங்கையில் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இலங்கையில் வாழும் 1.3 பில்லியன் மக்களது வர்ததகத்தின் நடவடிக்கையில் பாரிய பங்களிப்பபை இந்த அமைச்சு செய்து வருவதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -