பொத்துவிலில் சாலை விபத்தில் ஒருவர் பலி!

சம்சுல் ஹுதா-
பொத்துவில் அறுகம்மை உல்லைப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார். 

மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் ஒன்றுக்கொன்று முந்திக் கொள்ள முற்பட்ட வேலையிலே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் வந்த பொத்துவில் - 05 சவாலை உல்லைப் பகுதியைச் சேரந்த முகம்மட் ஹனீபா அப்துல் றஹீம் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் மோட்டார் சைக்கிள் வந்த நபர் பலத்த காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்கா அம்பாறை பொது வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேத பரிசோதனைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் உடல் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -