இந்து சமூகத்தின் முத்து என வர்ணிக்கபடும் இலங்காபுரியின் கொழும்பு மாநாகரில் வடபால் பண்டாரநாயக்க மாவத்த (தட்டாத்தெரு) எனும் திவ்யகேஸ்திரத்தில் வணிக வைசிய செட்டியார் குலத்தை சார்ந்த தமிழ்நாடு நாகப்பட்டினம் சீறீமான் உத்தாண்டி பிச்சையான் செட்டியாரினால் நிர்மாணிக்கப்பட்ட 150வருடங்கள் பழமை வாய்ந்த சிறீ சிவசுப்பிரமணிய சுமாமி தேவஸ்தானம் கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று மிகவும் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வைபவத்துக்கு பிரதம அதீதியாக ஐக்கியதேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினரும், மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளருமான பைரூஸ் ஹாஜி ஆகியோர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மூவின மக்களும் அதிகளவில் வருகைதந்திருந்தனை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.



