ஏ.எம்.றிகாஸ்-
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாகத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடாத்தப்பட்ட கண்காட்சி நிகழ்வொன்றின் போது தேசியக் கீதம் தமிழில் இசைத்த வேளையில் கிழக்குப் பல்கலைக்கழக பெரும்பான்மை இன மாணவர்களினால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனக் கோரியும் இக்கறுப்புப்பட்டி போராட்டம் நடாத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக ஊழியர்கள் தமது கடமைகளை சிலநிமிடங்கள் இடைநிறுத்தி கைகளில் கறுப்பு நிறமான பட்டிகளை சுற்றிக்கட்டிக்கொண்டு அலுவலக முன்றலில் அமைதியாக நின்று தமது கண்டனத்தை வெளிக்காட்டினர்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தின் விதாதா வளநிலையமும் கிழக்குப் பல்கலைக் கழகமும் இணைந்து இக்கண்காட்சியினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.