வெற்றிலை சின்னத்தில் மீண்டும் மஹிந்த!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அடுத்த தேர்தலில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினர்களான ரி.பி.ஏக்கநாயக்க மற்றும் குமார வெல்கம ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினர். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? என்பது பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது. 

முன்னாள் ஜனாதிபதிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட எவ்வித தடையும் இல்லை என ஜனாதிபதி மைத்திரி கூறியுள்ளார். 

இந்த சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சாதகமான பதிலை தந்ததாக ரி.பி.ஏக்கநாயக்க தெரிவித்தார்.
நன்றி அ.தெ.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -