திரைப்பட இயக்குனரும்,பல்துறைக் கலைஞருமான ஹூசைன் கௌரவிப்பு!

பாத்திமா ஹம்தா ஸீனத்-
ருதமுனை கல்வி, கலை, இலக்கிய, சமூக அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் மருதமுனையைச் சேர்ந்த பல்துறைக் கலைஞரும், கல்வியா ? காதலா ? திரைப்பட இயக்குனரும் கவிஞர் அல்லாமா இக்பால் கலைக் கழகத்தின் இஸ்தாபகருமான ஏ.எல்,ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்) அவர்கள் கலை. இலக்கியத் துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி நேற்று (12-04-2015) கௌரவிக்கப்பட்டார்.

மன்றத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான பி.எம்.எம்.ஏ.காதர் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மன்றத்தின் ஆலோசகரும் கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரியுமான ஏ.ஆர்.எம்.சாலிஹ் கலந்து கொண்டார். விஷேட அதிதியாக கல்வியா ? காதலா ? திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம் கலந்து கொண்டார்.

அதிதிகளாக மன்றத்தின் செயலாளரும், ஊடகவியலாளரும், அறிவிப்பாளருமான ஏ.எல்.எம்.சினாஸ். மன்றத்தின் உறுப்பினரும் நாடகக் கலைஞருமான ஏ..எல்.சபுறுத்தீன் (நெய்னா முகம்மட்) ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் பல்துறைக் கலைஞர் ஏ.எல்,ஐ.ஹூசைன் (ஜீனாராஜ்) அவர்களுக்கு திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ், திரைப்படத் தயாரிப்பாளர் எஸ்.எல்.எம்.நழீம் ஆகியோர் இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -