பாறுக் ஷிஹான்-
பள்ளிவாசல் மௌலவிகள் எங்கே அவர்களிடம் போகலாமே ஏன் என்னிடம் வருகின்றீர்கள் என கல்முனை ஸ்ரீ சுபத்திரராம விகாரையின் பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துகல சங்கரெட்ண தேரர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்று முதலைக்கண்ணீர் வடிப்பது போன்று கல்முனைப் பிரதேசத்தில் விழாவிற்கு அழைத்து மதத்தலைவர்களை அவமரியாதைப்படுத்துகின்றனர் என ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றமை யாவரையும் ஏமாற்றும் செயலாகும் என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.
கல்முனைப் பிரதேசத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு அழைக்கப்படும் மத குருமாருக்குரிய கௌரவம் வழங்கப்படாதது தொடர்பாக ஊடகங்களுக்கு இத்தேரர் கருத்து தெரிவித்துள்ளதாக அறிந்தேன்.
ஆனால் அன்று எனக்கு நடந்தது என்ன என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அதாவது இவ்வாண்டு தாதியர் உத்தியோகத்தர் ஆட்சேர்ப்பிற்காக விண்ணப்பித்த வேளை அதற்கான சமாதான நீதவான் ஒருவரது சிபார்சு எனக்கு தேவைப்பட்டது. இப்போது அப்பகுதியில் இருந்த பல சமாதான நீதவான்கள் வேலைப்பளுவில் காணப்பட்டனர். எனினும் தற்போதைய கல்முனை விகாராதிபதி சமாதான நீதவானாக உள்ளதாகவும் அவரிடம் தான் சிங்கள பாடத்தை கற்றதாக தெரிவித்த அன்பர் ஒருவர் சிபார்சினை விகாராதிபதி ஊடாக செய்து தருவதாக கூறி தேரரிடம் என்னை அழைத்து சென்றிருந்தார்.
ஆனால் அங்கு நடந்தது ஏமாற்றமே. அத்தேரரை சந்திப்பதற்காக என்னுடன் வந்த அன்பர் வணக்கம் தேரர் என்றபோது என்ன? என்று கேட்டார். அப்போது என்னுடன் வந்த அன்பர் தேரரை நோக்கி தன்னை தெரியுமோ என தேரரை நோக்கி வினவினார்.
ஆனாலும் தேரர் அவ்வேளை பல் விளக்கி கொண்டிருந்ததுடன் என்ன விடயமாக வந்துள்ளீர்கள் என வினவினார். அப்போது என்னை தேரருடன் இவர் தாதிய வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். எனவே அவருக்கு சிபார்சு ஒன்றினை வழமைபோன்று செய்து தர வேண்டும் என கேட்டார்.
அப்போது கோபப்பட்ட தேரர் மௌலவிமார் இல்லையோ அவங்கள்ட போகலாமே என கூறினார். ஆனால் மௌலவிமாரிடம் சமாதான நீதவான் உள்ளவர்கள் வெளியிடங்களிற்கு சென்றுள்ளனர் என குறிப்பிடவே அப்படியா? செய்ய முடியாது என குறிப்பிட்டு பின்னர் யோசித்த வண்ணம் விண்ணப்ப படிவத்தை அங்குள்ள மேசையில் வைக்குமாறும் அவசரமாக தான் எங்கோ போக வேண்டும் என அழுத்தமாக குறிப்பிட்டதுடன் விரும்பினால் வைத்துவிட்டு செல்லுங்கள் எனக்கூறினார்.
அவசரமாக நிரப்பி முடிவுத்திகதிக்கு இரு நாட்கள் இருந்ததன் காரணமாக அந்த அன்பருடன் வந்துவிட்டேன்.
இன்று கல்முனைப் பிரதேசத்திலுள்ள ஒரே ஒரு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக தன்னை காட்டி பிரதேசத்தில் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் மத்தியில் இன ஒற்றுமைக்காகவும் அவர்களது அபிவிருத்திக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்து வருகின்றார்.
இவர் தற்போது ஆசிச் செய்தியை விட அரசியல் கதைப்பது அதிகம் என்பதை மேற்சொன்ன கருத்தில் இருந்து அறிய முடிகின்றது.
இதற்கு கடந்த கால ஜனாதிபதித் தேர்தல் குறித்து மதத்தலைவர் என்ற நிலையில் நின்று அரசியல் கதைத்தது யாவரும் அறிந்த விடயம்.
எனவே தான் இவரது நடவடிக்கை குறித்து ஊடகங்கள் ,சில ஊடகவியலாளர்கள் செய்திகளை முக்கியத்துவப்படுத்துவது கவலையாக உள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் கூறினார்.
.jpg)