மூதூர் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பிரச்சனைக்கு நிலையான தீர்வு!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
மூதூர் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பிரச்சனைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

காலம் காலமாக மூதூர் பிரதேசம் முகம் கொடுத்து வரும் வெள்ளப் பெருக்கு பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானதென கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

வெள்ள முகாமைத்துவம் தொடர்பாக ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக திட்ட முன்மொழிவொன்றை விரைவாக சமர்ப்பிக்குமாறும் நிலாவளி­ சம்பூர் வீதியில் வெள்ளம் வழிந்தோடக்கூடிய முறையில் வடிகான்களை அமைக்குமாறும் கூறிய ஆளுநர் மூதூர் நீர்வழங்கல் வடிகாலமைப்புதிட்டத்திற்கான குறித்த வீதியினை புனரமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தை பணித்துள்ளார்.

இவ்வாறு ஒன்றிணைந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளை ஒன்றிணைப்பதன் மூலம் தீர்வுகாண ஆளுநர் முயற்சி செய்வது மிகவும் பாராட்டக்கூடியது என கிழக்குமாகாண முதலமைச்சர் நசீர் அகமட் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராய்ச்சி, திருகோணமலை மாவட்ட செயலாளர் புஸ்பகுமார, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், விவசாய, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் பல அரச திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -