கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நஸீரின் புதுவருட வாழ்த்துச் செய்தி!

அபு அலா -
சிங்கள, தமிழ் புத்தாண்டு இலங்கை மக்களின் மிக முக்கியமான கலை, கலாசாரப் பண்டியைகாகும். 

தொன்று தொட்டு இயற்கையுடன் ஆன்மீக ரீதியாக பின்னிப் பிணைந்து உழவுத் தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்வதற்குப் பழக்கப்பட்டுள்ள; இப்புத்தாண்டின் மூலம் இலங்கையிலுள்ள எல்லா இன மக்களும் ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவம், மகிழ்ச்சி, செளபாக்கியம் என்பவற்றை விருத்தி செய்யும் தேசியத் திருநாளான இத்திருநாளைக் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்தை தெரிவிப்பதில் பெருமிதமடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளரும் அதி உச்சபீட உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நஸீர் தமது புதுவருட வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

எமது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் மூலம் உறுவாகியிருக்கும் ஒரு நல்லாட்சியை யாராலும் தட்டிக்கழிக் முடியாது. அந்தளவு எமது ஜனாதிபதி இலங்கை நாட்டை நடாத்தி செல்லுவதை அவதானிக்க முடிகின்றது. இதன் மூலம் எமது மக்கள் மத்தியில் ஐக்கியம், சமாதானம், இன மத பாகுபாடு என்பன இல்லாமல் இருப்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கை மக்களாகிய நாம் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில், எமது தாய் நாட்டைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசமாக கட்டியெழுப்ப அனைவரும் இன வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

மலரப்போகும் இந்த புத்தாண்டை எமது தாய் நாட்டிலுள்ள எல்லா இன மக்களும் இன, மத, சாதி வேறுபாடுகளுக்கப்பால் எமது நாட்டை ஒரு நல்லாட்சிக்கான நாடாக மாற்றியமைக்க ஒற்றுமையுடன் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும். என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -