பொதுநிர்வாக இராஜாங்க அமைச்சர் சி.பி.ரட்னாயக்க, நேற்று (சனிக்கிழமை) நுவரெலியாவில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வேற்றுள்ளார்.
முன்னர் அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவை வழங்கினார். பின்னர் தேசிய அரசாங்கத்தின் கீழ் கடந்த மார்ச் மாதத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் புதிய அரசாங்க அமைச்சரவையில் இணைந்து கொண்டார்.
அதற்கு பின்னர் அவர் மஹிந்தவுக்கு ஆதரவாக முக்கிய நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று அவர் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவை நுவரெலியாவில் வைத்து வரவேற்றுள்ளார்.
நேற்று முன்னாள் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷ நுவரெலியாவில் வழிபாடுகளில் ஈடுப்பட்ட பின் மக்களை சந்தித்துள்ளார்.
