இதன்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் Dr. I.M. ஜவாஹிர் அவர்களுக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க நடவடிக்கையினால் நோயாளர் பராமரிப்புக்கு எந்தவித தடங்கலும் இடம்பெறாமல் இருப்பதனை அனைத்து தரப்பும் உறுதிசெய்ய வேண்டும் என்பதனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழு வேண்டிக்கொண்டது.
வைத்திய அத்தியட்சகர் I.M ஜவாஹிர் அவர்களுக்கும், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நிர்வாக மற்றும் இதர முரண்பாடுகள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் கீர்த்திக்கும் நோயாளர் பராமரிப்பிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற விடயமும் இதற்கு தீர்வு காண வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டன. வைத்தியசாலையின் நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகளை சுமூகமாக கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு முன்னெடுக்க வேண்டும் என்ற விடயம் அனைத்தும் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

0 comments :
Post a Comment