பிரதமர் ஹரிணி அமரசூரிய மீது தீய நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை உடனடியாக நிறுத்துங்கள்!



அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக 58 அறிஞர்கள் கையெழுத்திட்ட திறந்த கடிதம்
பிரதமர் ஹரிணி அமரசூரிய அவர்களை இலக்காகக் கொண்டு திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான அரசியல் தாக்குதல்கள் மற்றும் அவதூறு பிரச்சாரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி, நாட்டின் 58 முன்னணி அறிஞர்கள், கல்வியாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து ஒரு திறந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்தக் கடிதம், சமீப காலமாக பிரதமரை குறிவைத்து சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பரப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள், திசைதிருப்பும் தகவல்கள் மற்றும் களங்கப்படுத்தும் முயற்சிகள் குறித்து கடும் கவலையை வெளியிட்டுள்ளது. இவ்வகைச் செயற்பாடுகள் ஜனநாயக மதிப்பீடுகள், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் மற்றும் பொது வாழ்வில் பொறுப்பான விமர்சன மரபு ஆகியவற்றுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என அந்த அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பது ஜனநாயகத்தில் இயல்பானதே என்றாலும், தனிநபர் தாக்குதல்கள், திட்டமிட்ட பொய்தகவல் பரப்பல் மற்றும் அவதூறு பிரச்சாரங்கள் ஒரு ஆரோக்கியமான ஜனநாயக சமூகத்திற்கு ஆபத்தானவை என்றும், அவை சமூகப் பிளவுகளை தீவிரப்படுத்தும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த திறந்த கடிதத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளில் ஒருவரான பேராசிரியர் மொஹம்மட் பாஸில் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முன்னணி அறிஞர்கள் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 
இது, அரசியல் எல்லைகளைத் தாண்டி ஜனநாயகப் பண்புகளை பாதுகாக்கும் பொது நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கையெழுத்திட்டவர்கள்:

பேராசிரியர் ஜயதேவ உயங்கொட
பேராசிரியர் ஜகத் வீரசிங்க
கலாநிதி காமினி விஜேசூரிய
கலாநிதி ராதிகா குமாரஸ்வாமி
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
பேராசிரியர் அன்பகன் ஆரியதுரை
பேராசிரியர் நீரா விக்ரமசிங்க
பேராசிரியர் நெலூபர் டி மெல்
பேராசிரியர் பர்ஷானா ஹனீபா
பேராசிரியர் பிரின்ஸ் ஜயதேவன்
பேராசிரியர் விவிமரி வாண்டர்பூட்டன்
பேராசிரியர் ரோஹன் பெர்னாண்டோ
பேராசிரியர் வசந்தா செனவிரத்ன
பேராசிரியர் உத்பலா ஏ. ஜயவர்தன
பேராசிரியர் காவனா என். ருவன்புர
சரித் குணவர்தன
விதுர முனசிங்க
சந்துன் துடுகல
பிரியந்தி பெர்னாண்டோ
பவானி பொன்சேகா
ஜனஹா செல்வராஜ்
கலாநிதி மகேந்திரன் திரு அரங்கன்
கலாநிதி அமாலி வேதகெதர
கலாநிதி தியாகராஜா வரதாஸ்
கலாநிதி அதுல சிறி சமரகோன்
கலாநிதி எஸ். ஜீவசுதன்
கலாநிதி கௌஷல்யா குமாரசிங்க
கலாநிதி திலீப் விதாரண
கலாநிதி சிதுமிணி ரத்னமல
கலாநிதி எஸ். அரிவலஹன்
கலாநிதி மரியதாஸ் ஆல்ஃபிரட்
கலாநிதி என். வரதன்
கலாநிதி கௌஷல்யா பெரேரா
கலாநிதி கிறிஸ்டல் பேயின்ஸ்
அர்மிசா டெகால்
வங்கீச சுமனசேகர
சிறீன் அப்துல் சுறூர்
சரலா எம்மானுவேல்
ஹிரண்யதா தேவசிறி
விமல் சாமிநாதன்
பொறியாளர் எம். சூரியசேகரம்
ஷிராணி மில்ஸ்
கலாநிதி சுலானி கொடிகார
ரொபர்ட் குரூஸ்
ருகி பெர்னாண்டோ
கலாநிதி பிரதீப் பீரிஸ்
பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி
கலாநிதி ரமேஷ் ராமசாமி
கலாநிதி சுசந்த பஸ்நாயக்க
கலாநிதி ஷாமலா குமார்
பேராசிரியர் பவித்ரா கைலாசபதி
கலாநிதி மதுபாஷிணி ரத்நாயக்க
பேராசிரியர் மொஹம்மட் பாஸில்
டியான் உய்யங்கொட
நெஹாமா ஜயவர்தன
கலாநிதி கே.டி. துஷாந்தி டி சில்வா
வி. கமலசிறி
கலாநிதி எம்.ஏ.எஸ். இப்ராஹிம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :