மஹிந்த தேர்தலில் போட்டியிடலாம் :பிரதமர் வேட்பாளராக போட்டியிடமுடியாது -ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ஸ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எவ்வித தடையும் கிடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட மஹிந்தவிற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய முடியாது என அவர் அறிவித்துள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம உள்ளிட்ட தரப்பினர் மகிந்த ராஜபக்ஸ பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட வேண்டுமென கோரியிருந்தனர். 

 முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார். 

 சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார். கட்சி பிளவடைந்து செல்வதனை அனுமதிக்க முடியாது எனவும் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கட்சியை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  
உதயன்-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -