சிஹல உருமய கட்சியின் மேல் மாகாணசபை உறுப்பிணரும் கம்பஹாமாவட்ட சிகல உருமைய அமைப்பாளரும் பிரபல பாடகருமான மாதுவாவே அரவிந்த ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியில் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுடன் கைகோர்த்து ஆதரவு வழங்கப்போவதாக இன்று தெரிவித்துள்ளார்.
இவர் இன்றைய சிகல உருமைய ஊடகமாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. என தெரிவித்தார். அத்துடன் சிகல உருமய கட்சியில் உள்ள 32 உள்ளுராட்சி உறுப்பிணர்களில் பெரும்பாலாணவர்கள் என்னுடன் இணைந்து அரசுடன் செயலாற்ற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சிகல உருமயக் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கே நாம் சேவையைப் பெற்றுக் கொடுப்பதே எனது நோக்கம். அதே போன்று கம்பஹா மாவட்ட மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். சிகல உருமைய கட்சி எடுத்த முடிபுக்கு நாம் ஒருபோதும் இணங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதே போன்று உண்மையை உணர்ந்து பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் உதயண் கம்மன் விலவும் மீண்டும் அரசில் சேருவார்கள். என அவர் இன்று மேல் மாகாண சபையின் நிகழ்வொண்றின்போது மேற்படி தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
.jpg)
0 comments :
Post a Comment