கல்வி அமைச்சைக் குற்றம் சாட்டியுள்ளது. இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்.

பொத்துவில் செய்தியாளர் தாஜகான் -

பொதுத் துறையில் ஜனாதிபதி அதிகரிப்புக்கு மேலதிகமாக கொடுப்பனவுகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்க, அதிகாரிகளோ அதிகரிப்புக்களை கிள்ளி வழங் கிக் கொண்டிப்பதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சைக் குற்றம் சாட்டியுள்ளது.

வாழ்வின் எழுச்சி பயனாளிகளுக்கு வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவுக்கு மேலதிகமாக கொடுப்பனவு, ஓய்வூதியம் பெறுநர் உள்ளிட்ட அரசதுறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவுக் கொடுப்பன வுக்கு மேலதிகமாக இடைக்காலக் கொடுப்பனவு.

நுகர்வோருக்கு நியாயம் கிடைக்க, நிர்ணய விலையைவிடக் குறைந்த விலையில் சதொச வர்த்தக நிலையங்கள் ஊடாக அரிசி விற்பனை, ஆனால், ஆசிரியர் களுக்கோ உயர்கல்வித் தொழிற்றகைமை பெற்றோருக்கு, அநீதி இழைக்க, கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஊடாக நிர்ணயித்த அடிப்படைச் சம்பளத்தில் இருந்து குறைப்பு.

இலங்கை கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, மிக நீண்டகால இழுத் தடிப்புக்களுக்குப்பின், 2008.07.01முதல் செயற்படும் வண்ணம்;, திருத்தியமைக்கப் பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பை, 2014.10.23இல் வெளியிட்ட கல்வி அமைச்சு, 2011.01.01முதல் நிலுவையுடன் அமுல்படுத்த 2010.01.05இல் அரசநிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றறிக்கையின் சம்பளத்திட்டத்தையும் அங்கீகரித்திருந்தது.

ஆனால், 1885/38 இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் திருத்தியமைக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பை, அமுல்படுத்துவதற்கான 35/2014 இலக்க சுற்றறிக் கையை, உயர்கல்வித் தொழிற்றகைமை பெற்றோருக்கு, 6/2006 (111) இலக்க சுற்ற றிக்கையில் நிர்ணயித்த அடிப்படைச் சம்பளத்தைவிட குறைந்த சம்பளத்தை வழங்கும் வகையில், 2014.11.10இல் வெளியிட்டுள்ளது.

வாழ்வின் எழுச்சிப் பயனாளிகளுக்கு 4 அல்லது அதற்கு அதிக உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 3,000 ரூபா, 3 உறுப்பினர்களைக் கொண்ட குடும் பங்களுக்கு 2,500 ரூபா, ஏனைய குடும்பங்களுக்கு 1,000ரூபா என்று,
ஒக்டோபர் 24 வரவு செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட மாதாந்த கொடுப்பனவுகளுக்கு மேல திகமாக, அது அறிவிக்கப்பட்ட 24 நாட்களில், நவம்பர் 18மற்றும் 19ஆம் திகதி களில் அனைத்து வாழ்வின் எழுச்சிப் பயனாளிகளுக்கும், அதற்கு மேலதிகமாக 2,500ரூபா வழங்கப்பட்டுள்ளது.
சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு, 2015ஜனவரி முதல் அதிகரிக்கப்பட்ட 2,200 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்வரை, நிறைவேற்றுத்தர 24,725 ரூபாவை அல்லது அதற்கு மேற்பட்ட ஆரம்பச்சம்பளப் படிமுறையாகக் கொண்டவர்களுக்கு 2014.08.31 வரைக்கும், ஏனையவர்களுக்கு 2014.06.30வரைக்கும், 2014நவம்பர் முதல் மேலதிக மாக 3,000 ரூபாவையும், ஓய்வூதியம் பெறுநர்களுக்கு ஓய்வூதியம் மறுசீரமைக்கப் படும்வரை 2,500ரூபாவையும் அது அறிவிக்கப்பட்ட ஏழு நாட்களில் மேலதிகமாக இடைக்காலக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது. 

நெல் அரிசி பாவணையாளர்களுக்கு, சம்பா அரிசி 76ரூபா, நாட்டரிசி 68ரூபா, வெள்ளைப்பச்சையரிசி 66ரூபா என உத்தரவாதவிலை நிர்ணயிக்கப் பட்டபோது, ஏற்படுத்தப்பட்ட செயற்கைத் தட்டுப்பாட்டைப் போக்கும் வரையில்.2014. செப்டம்பர் 13முதல் உத்தரவாத விலைக்குக் குறைந்த விலையில், சம்பா அரிசி 76ரூபா நாட்டரிசி 67ரூபா, வெள்ளைப்பச்சையரிசி 64ரூபாவாகவும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

ஆனால், 2008.07.01முதல் அமுல்படுத்தி, 2011.01.01முதல் நிலுவையுடன் சம்பளம் வழங்கும் பொருட்டு, 1885/38இலக்க விசேட வர்த்தமானி மூலம் 2014.10.23இல் வெளியிடப்பட்டு, சட்டமாக்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட சேவைப் பிரமாணக் குறிப்பை அமுல்படுத்த, 2014.11.10இல் வெளியிட்ட 35/2014இலக்க சுற்றறிக்கை மூலம் எட்டு நாட்களில் வெட்டிக் குறைத்துள்ளது.
பிரமாணக்குறிப்பு மூலம் பயிற்சியுடன் பட்டம், கல்விமாணிப் பட்டம், பட்டத்துடன் பின்கல்வி டிப்ளோமா, முதலாவது பட்டம் மற்றும் பட்டப்பின்கல்வி டிப்ளோமாவுடன், முதுகல்விமாணிப் பட்டம், என்பவற்றிற்கு, வகுப்பு 2-ஐக்கு 20,550 ரூபா ஆரம்பச் சம்பளமாக அனுமதிக்கப்பட்டிருந்த அடிப்படைச் சம்பளத்தில் 1,200 ரூபாவை வெட்டிக்குறைத்து 19,350 ரூபாவாகவும், வகுப்பு 1க்கு 24,330 ரூபா ஆரம்பச் சம்பளமாக அனுமதிக்கப்பட்டிருந்த அடிப்படைச் சம்பளத்தில் 1,935 ரூபாவை வெட்டிக்குறைத்து. 22,395 ரூபாவாகவும் வழங்க கல்வி அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :