பின்லேடனை கொன்றவர் வெளி உலகத்திற்கு அம்பலம்- வீடியோ இணைப்பு


ல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற நபர், முதன்முறையாக வெளி உலகத்துக்கு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டில் பாகிஸ்தானின் அபோதாபாத்தில்(Abbottabad) உள்ள ரகசிய வீட்டில் பதுங்கி வாழ்ந்து வந்த பின்லேடனை அமெரிக்க ராணுவத்தினர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி சுட்டுக் கொன்றனர்.

இதன்பின் பின்லேடனை கடலில் வீசி சமாதி கட்டியதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இதுவரை பின்லேடனை கொன்ற நபர் யார் என்ற விவரத்தையும், யாரெல்லாம் அந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதையும் அமெரிக்கா வெளியிடவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பின்லேடனை நேருக்கு நேர் சுட்டுக் கொன்ற வீரர் தனது அடையாளத்தை வெளி உலகத்துக்கு காட்டுவுள்ளதாக அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார்.

தற்போது அவர் வெளியுலகத்துக்கு வெட்டவெளிச்சமாகியுள்ளார். அவரின் பெயர் ராப் ஓ நீல்(Rob O'Neill Age-38). பின்லேடனை மிக அருகில் பார்த்த ராப், அவரின் தலையில் 3 முறை சுட்டது தெரியவந்துள்ளது.

மேலும் ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானின் போர் பகுதிகளில் கலந்து கொண்ட ராப், இதுவரை 400க்கும் மேற்பட்ட போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். ஆனால் தற்போது பின்லேடனின் படுகொலை குறித்து, இவர் பொது இடங்களில் பேசுவது கிடையாது.அமெரிக்க 

இதற்கிடையே இவரது வீரச்செயலுக்கு, ஜனாதிபதி ஒபாமாவும் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :