ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவையும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிகின்றது.
இவர் ஆளும் தரப்பிற்கு மாறி வெளிவிவகார அமைச்சர் பதவியை பெற்றுக்கொள்ளவுள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
தற்போது சிங்கப்பூர் சென்றுள்ள மங்கள சமரவீர எம்.பி. இந்த விஜயத்திற்கு முன்னரே ஜனாதிபதியையும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பீடத்துடன் முரண்பட்ட நிலையிலேயே அவர் ஆளும் தரப்பிற்கு மாறவுள்ளதாக தகவல்கள் வெ ளியாகியுள்ளன.
ஐ.தே.க.வின் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டதிலிருந்து இக்கட்சியின் தலைமைபீடத்துடன் மங்கள சமரவீர எம்.பி. முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மங்கள சமரவீர எம்.பி.யுடன் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றொரு எம்.பி.யும் குருணாகல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இன்னுமொரு எம்.பியும் அரச பக்கம் மாறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்தும் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

0 comments :
Post a Comment