நிந்தவூர், மாவட்ட வைத்தியசாலை வீதியின் அவல நிலை!

 நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியின் அவல நிலை தொடர்பாக பல முறை பல பத்திரிகைகளிலும் இணையங்களூடாகவும் செய்திகள் வெளி வந்தவாறே காணக்கிடைக்கின்றது. ஆனால் இவ்வீதி தொடர்பாக இதுவரைக்கும் எந்தவொரு தரப்பினராலும் கரிசனைகொண்டாவது இவ் வீதியை புணரமைப்பதற்கு முன்வரதமை மிகவும் வருந்தத்தக்க விடையமாகும்.

உணம்யில் இவ் வீதியின் அவல நிலை குறித்து நிந்தவூர் மக்களாகிய நாம் அனைவரும் வெக்கப்பட்டு தலைகுனிய வேண்டும்.

இவ் வீதியானது நிந்தவூர் மக்களுக்கு ஓர் முதுகெலும்பை போன்று அனைவருக்கும் மிகவும் உபயோகப்படக்கூடிய ஒரு பிரதான வீதியும்கூட இதனை இத்தனை ஆண்டு காலங்களாக புணராமைக்காமல் காட்சிக்கு விட்டிருக்கின்றேமேயானால் இதை நினைத்து மக்களாகிய உண்மையில் தலைகுனியவேண்டும்.

இவ்வீதி தொடர்பாக இணையங்களில் செய்திகளை காணும்போதெல்லாம் நாம் அனைவரும் அரசாங்கத்தையும், அரசியல்வாதிகளையும் திட்டிதீர்த்துவிடுகின்றோம் இதுவொரு பக்கம் மக்களின் நியாயக் கொள்கையாக இருந்தாலும்கூட இதன் உண்மையையும் மக்களாகிய நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

இவ்வீதியை புணரமைப்பதற்காக அரசினால் பல ஆண்டுகளுக்கு முன்பு நிதித் தொகை ஒதுக்கப்பட்டு அரச நிறுவனங்களால் புணர்நிர்மாணம் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் இவ் வீதி புணரமைக்கபடாமைக்கு அவ் வீதி அருகில் வசிக்கும் ஒரு சில மக்களும் ஓர் முக்கிய காரமாகும். அதனால் இவ்வீதியை புணரமைப்பதற்கு சில தடங்கல்கள் ஏற்பட்டு காலங்கள் கடந்தமையினால் புணரமைப்புக்குரிய நிதித் தொகையினை அரசினால் மீள் பெறப்பட்டதாக சில அரசில் தரப்புக்களினால் தகவல்கள் அறியக்கிடைத்துள்ளது..

இது முற்றிலும் உண்மையாயின் மக்களாகிய நாமே உணரவேண்டும் இவ்விடயத்தில் நாமே தவறிழந்துவிட்டு அரச தரப்பையோ இல்லை வேறு எந்த தரப்புக்கள் மீதோ பழிசுமத்துவதென்பது எந்தவகையில் நியாயம் என்பது நமக்குள்ளே கேள்வியெழுப்பி பார்க்கவேண்டும் அப்போதுதான் அதற்குரிய பதிலும் கிடைக்கும்.

இவ்வீதி புணர்மைப்பு தொடர்பாக பல முறை பல அரசியல் தரப்புக்களிடம் தொடர்புகொண்று பேசியபோது இதில் சில உண்மைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

அதாவது அரச தரப்பினர் கூறுகையில், இவ்வீதியை புணரமைப்பதற்கு அன்று தொட்டு இன்று வரை அவ்வீதி அருகில் வசிக்கும் சில மக்களின் வேண்டா பிடிவாதக் கொள்கைக்கு மத்தியில் இவ்வீதியை புணரமைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதென்று கூறிகின்ரார்கள்.

அதாவது அவ்வீதி அருகாமையில் வசிக்கும் சிலர் அவ்வீதிக்கு சொந்தமான இடத்தை சேர்த்து தமது மதில் சுவர்களை கட்டியிருப்பதனால் அவ்வீதியை ஒழுங்கான முறையில் விரிவுபடுத்தி புணரமைப்பதற்கு அம் மக்களே தடை விதிக்கின்றனர். இதில் இவ்விடத்திலுள்ள மக்களே தன் சுயநலம் காக்கும் போது அரசினால் மட்டும் எப்படி சுயநலம் விட்டுக்கொடுக்க முடியுமென்று கேள்வியெளுப்புகின்றார்கள் இது உண்மையில் ஒரு நியாயக் கேள்வியாகவே தோன்றுகின்றது. 

ஆகவே நிந்தவூர் மக்களாகிய நாம் இவ்வீதியை புணரமைப்பதற்கான விடையத்தில் தமது சுயநலத்துக்காக பொதுநலத்தை இழப்பதென்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதவொரு விடையமாகும். இதில் ஊர் மக்களின் ஒத்தொளைப்பு மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது ஆகையால் இதில் நமது முழு ஒத்தொளைப்பினை வழங்கி இவ்வீதியை புணரமைப்பதற்குரிய வழியை விரைவில் தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் முன் வருவோமேயானால் மாத்திரமே இவ்வீதியை புணரமைப்பதற்குரிய வழிகள் சாத்தியமாகுமென்பது எனது கருத்து.

முஹம்மட் ஜெலீல்
நிந்தவூர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :