அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் பதுளை மக்களுக்கு உதவி

 த.நவோஜ்-

துளை மாவட்டத்தின் கொஸ்லாந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் உடைகள் உதவி வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகல தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாருக்குமான அனைத்து வகையான உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இவ்உதவி தங்களுக்கு பெரும் உதவியாக அமைந்ததாகவும், இவ்உதவியை வழங்கிய சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினருக்கும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு நன்றி தெரிவித்தனர்.

இம்மக்களுக்கு சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் இரண்டு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாய் உடனடி உதவிக்காக வழங்கியிருந்தார்கள். இதன்போது இம்மக்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியாக உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.

சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினர் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார ரீதியாகவும், பல்கலைக் கழக கல்வியை கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கணவனை இழந்த பெண்களின் சுயதொழிலுக்காகவும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும், தென்னை மரக் கன்றுகள் போன்ற பல உதவிகளை தமிழ் உணவு மற்றும் ஆன்மீக உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.

மலையக மக்கள் தற்போது பாதிக்கப்பட்டதற்கு உடனடியாக வெளி இடங்களிலும் இருந்து முதல் தடவையாக தங்களுக்கு இவ்உதவி வழங்கி இருந்ததாகவும், இது தங்களுக்கு அவசியமாக தற்போது தேவைப்படும் உதவியெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :