NFGGயின் ஏற்பாட்டில் , வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்ற நினைவு நிகழ்வு!

வட மாகாண முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 24 ஆண்டு நிறைவை முன்னிட்டு விஷேட நிகழ்வு ஒன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) ஏற்பாட்டில் கடந்த 30.10.2014ம் திகதி மன்னாரில் இடம்பெற்றது.

'நல்லிணக்கமாய் வாழ்வோம், பலமாய் எழுவோம்' எனும் தொனிப் பொருளில் NFGGயின் பொதுச் செயலாளர் நஜா முஹம்மத் அவர்களின் தலைமையில் மன்னார் YMCA மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக் கழக பேராசிரியர் கலாநிதி SH ஹஸ்புள்ளாஹ், மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதி அருட்தந்தை விக்டர், மன்னார் ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி ஹிதாயதுள்ளாஹ், புத்தளம் ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துள்ளாஹ் ஹஸ்ரத், NFGG இன் தலைவர் பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதன்போது மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் சமூகங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள், சிவில் சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

'வட மாகாண முஸ்லீம்கள் கடந்து வந்த பாதையும் முன்னோக்கியுள்ள பாதையும்' என்ற தலைப்பில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் சிறப்புரை ஆற்றினார்.

அத்துடன் வடமாகாண முஸ்லீம்களின் மீள் குடியேற்றம் தொடர்பான கொள்கைத் தீர்மான முன்மொழிவுகளை முன்வைத்து வடமாகாண சபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் உரையாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :