பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நிலவும் ஆளணி பற்றாக்குறையினை உடனடியாக சீர் செய்ய சுகாதார திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவினரின் கலந்துரையாடலில் அபிவிருத்திக்குழுத்தலைவர் கலாநிதி எம்.எச். ஹாறூன் அவர்கள் நேற்று 2014.10.5 ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.
மேலும் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுது
வைத்தியசாலை எதிர் நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அப்பிரச்சினைகளில் மிக முக்கிய பிரச்சினை ஆளனியினரின் வளப்பற்றாக்குறையாகும். 40 சிற்றூழியர்கள் தேவையான நிலையில் 16 சிற்றூழியர்களும் 33 தாதிமார்கள் தேவைக்கு 24 தாதிமார்களும் 17 வைத்தியர்களுக்கு 13 வைத்தியர்களும் விஸேட வைத்திய நிபுணர்கள் யாருமற்ற நிலையிலும் பொத்துவில் ஆதார வைத்தியசாலை இயங்குவதாக குறிப்பிட்டார்.
அதிகமான நோயாளிகளை 45 கி.மீ. தொலைவில் உள்ள அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கும் 75 கி.மீ கல்முனை ஆதார வைத்தியசாலைக்கும் 95 கி.மீ. மொனறாகலை ஆதார வைத்திய சாலைக்கும் நோயாளிகளை இடமாற்றம் செய்து கொண்டிருக்கின்றது. இதனால் நோயாளிகள் பல சிக்கல்களை எதிர் நோக்கி வருகின்றார்கள்.
பொத்துவில் பிரதேசமானது சுற்றுலாவின் கேந்திரமாகும். நாளாந்தம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொத்துவில் அறுகம்பையை நோக்கி வந்து கொண்டிருக்கின்ற நிலையில் பயணிகளுக்கு திடீர் நோய் ஏற்பட்டால் எங்கு செல்வது பொத்துவில் வைத்தியசாலைக்குத்தானே ஆனால் அந்த வைத்தியசாலை இன்னும் சரியான வசதிகள் இன்றி காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி அதிகளவான படை வீரர்களும் இங்கு தளமிட்டு இருக்கின்றார்கள் இவர்களுக்கு ஏற்படும் திடீர் நோய்களுக்கு பொத்துவில் வைத்திய சாலைக்குத்தான் வர வேண்டும். ஆனால் ஆதாரமற்ற வைத்திய சாலை நோய்க்கு ஆதாரமாக அமையுமா? ஏன்று கருத்து வெளியிட்டார் கலாநிதி ஹாறூன் அவர்கள்.
0 comments :
Post a Comment