இஸ்லாம் ஒற்றுமையின் மார்க்கம் என்பார்கள். அந்த ஒற்றுமையைக் காண்பிப்பதில் பள்ளிவாசல்கள் முன்னிலை வகிக்கின்றன. அதேபோன்று இலட்சோப இலட்ச முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் ஒன்றுகூடி தன்னையும் இவ்வுலகம் உட்பட அண்ட சராசரங்களையும் படைந்த ஏக இறைவனை மக்காவில் துதிசெய்கின்ற நிகழ்வுகள் ஹஜ்ஜை முன்னிலைப்படுத்துகின்றது. ஹாஜிகள் மக்காவிலுள்ள அறபா எனும் பெரு மைதானத்தில் ஒன்றுகூடி இறைவனின் பக்கம் தன் பார்வையை செலுத்தும் கடமையில் ஈடுபடுகின்றனர். அடுத்தநாள் உலக முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் அமைந்துள்ளது.
நாடு, மொழி, இனம், நிறம், கோத்திரம், செல்வம், செல்வாக்கு ஆகிய அனைத்து வேறுபாடுகளையும் மறந்து உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வுடன் கூடும் உலக மகா மாநாடு ஹஜ் எனலாம். வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையைப் பறைசாற்ற வேண்டிய புனித மிக்க ஆலயத்தில் கூட சிலர் அறியாமையின் காரணமாக வேறுபட்டு நிற்கும் கொடுமையைக் காண்கிறோம். மத்ஹபுகளின் பெயரால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஹஜ் செய்யும் நிலையையும் காண்கிறோம். அணிகின்ற ஆடைகள் கூட ஒரே மாதிரியாக இருக்க வேண்டிய இடத்தில் வணக்க வழிபாடுகளில் வித்தியாசப்படுவதை விடக் கொடுமை என்ன இருக்க முடியும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு ஹஜ் செய்வது என்பதை என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்(முஸ்லிம் 2286) என்று கூறியதுடன் செய்து காட்டி விட்டும் சென்றுள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு மூன்று தடவை ஹஜ் செய்து ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக நடந்திருந்தால் வித்தியாசங்கள் ஏற்பட சிறிதளவாவது நியாயம் இருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ ஒரே ஒரு தடவைதான் ஹஜ் செய்திருந்தார்கள். அந்த ஹஜ்ஜை அவர்கள் எவ்வாறு செய்தார்களோ அந்த ஒரே விதமாகத் தான் நாம் அனைவரும் செய்தாக வேண்டும். அந்தப் புண்ணிய பூமியிலாவது ஒரே விதமான வணக்கங்கள் புரிய வேண்டும் என்பதுதான் உலக முஸ்லிம்களின் அவாவாகும்.
பொதுவாக இந்த ஹஜ் வணக்க வழிபாடானது துல்ஹஜ் மாதத்தின் 8-ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை சவூதி அரேபியாவிலுள்ள மினா, அறஃபாத், முஸ்தலிஃபா ஆகிய இடங்களில் தங்குவது, அந்நாட்களில் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவது, மக்கா நகரிலுள்ள கஃபாவைத் தவாஃப் செய்வது ஆகியவை ஹஜ்ஜின் முக்கிய அம்சங்களாகும். ஹிஜ்ரி நாட்காட்டி என்பது சந்திர நாட்காட்டி என்பதால் ஆங்கில நாட்காட்டியை விட இது வருடத்தில் பதினொரு நாட்கள் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறிமாறி வருவதையும் காண்கின்றோம்.
இவ்வாண்டு ஹஜ்ஜூப் பெருநாள் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒருசோதனை நிறைந்ததாகவே அமைந்திருந்தன எனக்கூறுவோர் பலர். ஏனெனில் மக்காவிலுள்ள அறபா வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றுகூடலைத் தொடர்ந்து சனிக்கிழமை பெருநாள் கொண்டாடுவது என்பது சர்வதேசப் பிறையாளர்களின் கணிப்பு. இதே அடிப்படையில் சில குழுக்கள் சனிக்கிழமை பெருநாளைக் கொண்டாடினர். இது உலகின் பல நாடுகளில் இடம்பெற்றதையும் கவனித்தோம். இலங்கையில் பிறைதென்பட்டதன் பிரகாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவேண்டும் என்கிற முடிவினை மாற்றியமைத்து திங்கள் கிழமை (06.10.2014) ஆகிய இன்று புனித ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடுமாறு இலங்கை ஜம்யத்துல் உலமாவின் கோரிக்கையாக இருந்தது. சரிபிழை ஒருபுறமிருக்க இதனால் பல்வேறு உளச்சலுக்குள்ளாகியிருக்கின்றனர் பாமர முஸ்லிம்கள்.
ஏனெனில், ஹஜ்ஜிப் பெருநாளைத் தொடர்ந்து முஸ்லிம்களால் செய்யப்படவேண்டிய முக்கிய கிரிகையாகப்(இபாதத்) பின்பற்றப்படுகின்ற உழ்ஹியா எனப்படுகின்ற மாடு, ஆடு போன்ற பிராணிகளை அறுத்து கொடுக்கின்ற விடயமாகும். இதில் ஏற்பட்டுள்ள தடங்கள் காரணமாக இலங்கை முஸ்லிம்கள் கடுமையான சஞ்சலத்தை எதிர்நோக்கியிருந்தனர். சனிக்கிழமை கொண்டாடியவர்கள் சனிக்கிழமை அதனை நிறைவேற்றினர்.
அதேவேளை பலர் அந்தத்தினத்தில் நோன்புவைத்திருந்தனர். அறபாவுடைய தினத்தின் பிரகாரம் இந்த குர்பான் கொடுப்பதற்கான கால எல்லை எதிர்வரும் செவ்வாய் கிழமை வரையில் காணப்படுவதால் இன்று பெருநாளைக் கொண்டாடுகின்றவர்களும் நாளையுடன் முடித்துக் கொள்ளவேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குயள் தள்ளப்பட்டிருப்பதாக அறபுக் கல்லூரி ஒன்றின் அதிபர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இப்புனிதப் பயணக் கிரியைகள்ஃகடமைகளில் கடைசியாக குர்பான் கொடுப்பது முக்கியமான அம்சமாகும். இது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாளில் நடைபெறவேண்டும். ஹஜ்பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுப்பதாக இச்செய்கை அமையும். இஸ்லாமியர்கள் தங்களது ஊரிலும் பெருநாள் தொழுகையை முடித்ததன் பின்னர் இக்கடமையை மேற்கொள்வார்கள். ஆனால் இந்தக் கடமையில் நமது நாட்டு முஸ்லிம்களின் நிலைமையினைக் கவனிக்கின்றபோது பல்வேறு கேள்விகள் தோன்றுகின்றன.
கடந்த பல வருடங்களாக நமது நாட்டில் பிறைபார்க்கின்ற பிறைக்குழுவினர் மேற்கொள்கின்ற தீர்மானங்களை குறித்த சில உலமாக்களும் அவர்களைத் தொடர்கின்ற முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும், அதோடு இணைந்துள்ள இலங்கை ஜம்;;யத்துல் உலமா சபையினரின் தீர்மானத்தினை உதாசீனம் செய்வதுமாக இருப்பதன் காரணமாக பொதுவாக இலங்கைவாழ் முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமைமிக்க மார்க்கம் இஸ்லாம் என்பதற்கான அடிப்படையே குலைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாட்டில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மாத்திரமன்றி உலகிலுள்ள முஸ்லிம் அறிஞர்கள் ஒன்றுகூடி இதற்கான வழிவகைகளை மேற்கொள்வதும் அவசியமான ஒன்றாகும் என்பது சாதாரண முஸ்லிம் மக்களின் கோரிக்கையாகும்.
அதேவேளை இன்று பெருநாளைக் கொண்டாடுகின்ற இலங்கைவாழ் முஸ்லிம்களின் நிலைமையில் இருந்து பார்க்கின்றபோது இன்றிலிருந்து மேலும் மூன்றுதினங்களுக்கு இந்த உயிர்ப்பலியான உழ்ஹியா எனப்படும் குர்பான் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை இலங்கைவாழ் உலமாக்கள் தெளிவுபடுத்துதல் வேண்டும். இலங்கையில் பிறையைக் பார்த்து கணிக்கின்ற குழுவினரை மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக சில உலமாக்கள் கூறுவதையும் நாம் கேட்டிருக்கின்றோம். இதற்கான முடிவுகள் நிரந்தரமான முறையில் இருப்பதற்கு முஸ்லிம் தலைவர்களும், உலமாக்களும் முன்வருதல் அவசியமாகும்.
நபி இப்றாகீம்(அலை), நபி இஸ்மாயில்(அலை), அன்னை ஹாஜரா நாயகி ஆகியோரின் வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட புனித ஹஜ் கிரிகையானது(இபாதத்) தியாகத்தின் விளைவினால் ஏற்பட்ட ஒன்றாகும். மனிதர்கள் தமது இறைவனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் தன்னையும்;, தன் பொருளாதாரத்தையும், தனது சொந்தபந்தங்களையும் தியாகம் செய்யவேண்டியுள்ளது. அதனை நினைவிற்கொண்டுள்ள ஹஜ் பயணமும், அதனைத் தொடர்கின்ற ஹஜ் பெருநாளும் கொண்டாடப்படுகின்றது.
எனவே, ஒற்றுமையின் பக்கம் நமது முஸ்லிம் சமூகம் ஒரே குடையின்கீழ் வரவேண்டுமாக இருந்தால் எமக்குள்ள விடயங்களை பேசித்தீர்த்துக் கொள்ள உலமாக்கள் முன்வரவேண்டும். ஆளுக்கொரு தினம் பெருநாள், மக்கள் மத்தியில் இஸ்லாமிய அகீதாவில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, மார்க்கத்தினுள் ஊடுறுவியுள்ள பித்அத் போன்றவற்றை சீர்செய்ய ஓரேயமைப்புள்ள ஒற்றுமையான முஸ்லிம் உம்மாவாக எம்மை நாம் மாற்றிக் கொள்ளவேண்டும். ஒற்றுமையில் பிளவு ஏற்படுமாக இருந்தால் பேரின சக்திகள் வழிகெடுப்பது இலகுவாக அமையும்.

இறைவனுக்காக ஆடு, மாடு போன்ற பிராணிகளை ஏழைகள், உறவினர்கள் மற்றும் கொடுப்பவர்களும் பங்கிட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இந்த விடயத்தில் நம் நாட்டு முஸ்லிம்கள் மத்தில் எப்போது அறுப்பது, எவருடைய கட்டளையை பின்பற்றுவது, சர்வதேசப் பிறை சரியா, உலமாசபையினரின் அறிவித்தல் சரியா, பிறைக்குழுவினரின் அறிக்கை சரியா என்கிற விடயங்களுக்கும் அப்பால் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பேரினவாதக் குழுக்களின் அச்சுறுத்தல் வாழ்வதற்கான இருப்பில் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்றவர்களுக்கு இவ்விடயமானது வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி இருக்கும்.
எனவே, ஒற்றுமையின் பக்கம் நமது முஸ்லிம் சமூகம் ஒரே குடையின்கீழ் வரவேண்டுமாக இருந்தால் எமக்குள்ள விடயங்களை பேசித்தீர்த்துக் கொள்ள உலமாக்கள் முன்வரவேண்டும். ஆளுக்கொரு தினம் பெருநாள், மக்கள் மத்தியில் இஸ்லாமிய அகீதாவில் ஏற்பட்டுள்ள வெடிப்பு, மார்க்கத்தினுள் ஊடுறுவியுள்ள பித்அத் போன்றவற்றை சீர்செய்ய ஓரேயமைப்புள்ள ஒற்றுமையான முஸ்லிம் உம்மாவாக எம்மை நாம் மாற்றிக் கொள்ளவேண்டும். ஒற்றுமையில் பிளவு ஏற்படுமாக இருந்தால் பேரின சக்திகள் வழிகெடுப்பது இலகுவாக அமையும்.
எங்கோ இருக்கின்ற முஸ்லிம் ஒருவருக்கு நடக்கும் அநியாயத்திற்கு குரல்கொடுக்கும் நாம் நமது கண்முன்னே நடைபெறும் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு இடம்கொடுக்காது உண்மையின் பக்கம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுகின்ற உண்மையான முஸ்லிம்களாக வாழ்வதற்கான நிலைமையினை ஏற்படுத்துவது கட்டாயமாகும். புனிதமிகு ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைத்துள்ளங்களுக்கும் தியாகத் திருநாளின் நல்லருள் கிடைக்க இறைவனை பிராத்திப்போம். <நன்றி - சுடர்ஒளி>
0 comments :
Post a Comment