பொத்துவில் அல்- ஹூதா வித்தியாலயத்தில் கலாசார நிகழ்வுகள் -படங்கள்




பொத்துவில் செய்தியாளர் எம்.ஏ.தாஜகான்-


மூக நல்லிணக்க கலாசார விழுமியங்களை கட்டிக்காக்கும் வகையில் பொத்துவில் அல்- ஹூதா வித்தியாலயத்தில் கலாசார நிகழ்வுகள் வித்தியாலயத்தின் அதிபர் எம்.ஏ.சி சிஹாப்தீன் அவர்களின் தலைமையில் அண்மையில் நடை பெற்றது.

இக்கலாசார நிகழ்வில் பொத்துவில் மெதடிஸ்த தமிழ் மகாவித்தியாலய தமிழ் மாணவர்களும் பொத்துவில் சிங்கள வித்தியாலயத்தின் மாணவர்களும் கலந்து நிகழ்சிகளில் பங்கு பற்றினார்கள்.

பொத்துவில் உப வலய கல்வி அலுவலகத்தின் கல்விப்பணிப்பாளர் ஏ.ஏ.அஸீஸ் பொத்துவில் தொகுதி சுதந்திர ஆசிரியர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.டி. செயினுலாப்தீன் மற்றும் வித்தியாலயத்தின் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர். 

கலை நிகழ்சிகளை ஆசிரியர் அறிவிப்பாளர் பௌசர் அவர்கள் தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது. தத்தம் கலாசாரத்தை வெளிப்படுத்தும் உணவு வகைகளும் பரிமாறப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :