ஆரோக்கியமான வாழ்வுக்கு உடல் நலத்தைபோல மனநலமும் முக்கியம் உலகில் 35 கோடி பேர், மனநிலைபாதிக்கப்பட்டவர்களாக வாழ்கின்றனர் என்று ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
ஆரோக்கியமாக வாழ்தல் என்பதில் உடல் மட்டும் நோயற்று இருப்பதில்லை.மனமும் நோயற்று இருக்க வேண்டும் என்பதுடன் குடும்பம், சமூகம் அத்தோடுஆன்மீகமும் நன் நிலையில் இருப்பதையே ஆரோக்கியமாக வாழ்தல் எனகுறிப்பிடப்படுகின்றது.
உடல் நோயுறுவது போல் உளமும் நோய்வாய்ப்படும் தன்மையுள்ளது. உடல் உள நோய்கள் இரண்டும் ஒன்றாகத் தோன்றும் சந்தர்பங்கள்அதிகமாக காணப்படுகின்றன. அன்றாட வாழ்வில் பிரச்சினைகளால் எழும் துன்பதுயரங்களில் இருந்து மீண்டு வாழ உளநலன் அனைவருக்கும்இன்றியமையாததாக அமைந்திருக்கின்றது.
முன்னைய காலங்களில் தொற்று நோய்களுக்கு எதிராக போராடிய மருத்துவ உலகம் இன்று உளநோய்களுக்கு எதிராகவும் போராடநிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
உளநோய்கள் பொதுவாக மையநரம்புத் தொகுதியை மையமாக வைத்தே ஏற்படுகின்றன உதாரணமாக உளபிளவை நோய் இது பாரிய உளநோயாகும். சனத்தொகையில் 2 வீதமானவர்கள் இந்நோயுடன் வாழ்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்நோயாளியின் சிந்தனைகள்,பேச்சுவழக்கு, பார்வை, உணர்வுகளை உணர்ந்துகொள்ளும் விதம் மாறுபட்டவையாகவும், மாயமான தோற்றங்களை காண்பவையாகவும்அமையும்.
பெரும்பாலும் கட்டிளமைப்பருவத்தில் இந்நோய் ஏற்படலாம். இவ்வாரான நோயாளர்களை சமூகத்துடன் இணைத்து வாழ்தலே இவ்வாண்டின்கருப்பொருளாகும்.
ஏதாவதுதொரு தோல்வியால் ஏற்படும் கவலை, பதட்டம், வெட்கம், குற்ற உணர்வு, பயம் அன்புக்குரியவரின் மரணத்தினால் ஏற்படும்அதிர்ச்சி, சமூக உறவில் சிக்கல்கள் போன்றன மனநிலையைப் பாதிப்பதும் இந்நோய் வருவதற்கு தூண்டுகோலாக அமையலாம்.
காதல் தோல்வி, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத ஏமாற்றங்கள், இழப்புக்கள் முதலிய உளவியல்காரணங்களும் மனநோய்க்கு வித்திடலாம்.
மேலும் மது, கஞ்சா, போதை மாத்திரைகளின் தொடர் உபயோகம் தொடர்ச்சியான தூக்கமின்மை, உடலியல்சேரும் நட்சுப்பொருட்களினாலும்உளநோய் ஏற்படலாம். கணவன் தனது குடும்பத்தில் அக்கறை காட்டாமை, கணவன் மனைவியரிடை வாழ்வில் ஏற்படும் கசப்புத்தன்மையும்குடும்பம் எனும் பிணைப்பில் தளர்வுகள் ஏற்படுவதும் உளநலப் பிரச்சினைகளே.
இவ்வாறான உளநலப் பிரச்சினைகள் அதிகரிக்கின்ற போது தற்கொலை செய்யும் மனோநிலையும் அதிகரிக்கின்றது.
றினோஸ் ஹனீபா
உளவள ஆலோசகர்
(சிறுவர் விருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு)
கல்முனை பிரதேச செயலகம்.
உளவள ஆலோசகர்
(சிறுவர் விருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சு)
கல்முனை பிரதேச செயலகம்.
0 comments :
Post a Comment