ஈரானில் தற்காப்பிற்காய் ஒருவரைக்கொலை செய்த பெண்ணுக்கு இன்று தூக்கு பல அமைப்புக்கள் கண்டனம்

ரான் நாட்டை சேர்ந்தவர் ரெய்ஹென்னா ஜாப்ரி (வயது 26) . கடந்த 2007 ஆம் ஆண்டு தன்னை கற்பழிக்க முயன்ற ஈரானிய உளவுத்துறை அதிகாரி மற்றும் டாக்டரான மொர்டிஜா அப்டோலாலி சர்பாண்டியை ஜாப்ரி கொலை செய்தார்.

இதை தொடர்ந்து ஜாப்ரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. டெஹ்ரான் குற்றவியல் நீதிமன்றம் அவரை குற்றவாளி என் அறிவித்து அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.

ஜாப்ரியின் பல்வேறு முறையீடுகளையும் கோர்ட் நிராகரித்தது.

ஜாப்ரியை மரண தண்டனையில் இருந்து விடுவிக்க கோரி பல்வேறு அமைப்புக்கள் போராடி வந்தன. ஜாப்ரி முறையீடு மீது ஒழுங்கான விசாரணை நடைபெற வில்லை என குற்றம் சாட்டி உள்ளது.

பல் வேறு எதிர்ப்புகளையும் மீறி இன்று காலை ஜாப்ரி தூக்கிலிடபட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :