கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் மிகவும் வறிய குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விசேட திட்டத்திற்காக தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியில் இருந்து அவர் ஒரு தொகை நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார் என்று மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் செயலாளர் சி.எம்.ஏ.முனாஸ் தெரிவித்தார்.
மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டு காலமாக தமது வீடுகளில் மின்சார வசதியின்றி மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வந்தவர்கள் என்றும் இதனைக் கருத்தில் கொண்டே அவர்களுக்கு இந்த ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இவர்களுள் குறித்த சில குடும்பத்தினருக்கு மின்சார இணைப்பு பெறுவதில் இருந்து வந்த பல்வேறு வகையான சிக்கல்கள் இலங்கை மின்சார சபையின் ஒத்துழைப்புடன் நிவர்த்தி செய்யப்பட்டே அவர்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாகவும் செயலாளர் முனாஸ் சுட்டிக்காட்டினார்.
.jpg)
0 comments :
Post a Comment