ஊவா மாகாண சபை முதலமைச்சராக சஷீந்திர ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவரது பதவிப் பிரமாணம் நடைபெற்றுள்ளது.
அவருடன் ஆளுங்கட்சியின் சார்பில் ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஏனைய 19 உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
மேலும் மாகாண சபையின் நான்கு அமைச்சர்கள், சபை முதல்வர் ஆகிய பதவிகளுக்குத் தெரிவானவர்களும் அதற்காக தனியான பதவிப் பிரமாணத்தையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஊவா மாகாண சபைக்குத் தெரிவான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
வெளிநாடு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பிய பின், எதிர்வரும் 07ம் திகதி இந்த பதவிப் பிரமாணம் நடைபெறும் என்று அறியக்கிடைத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment