இலங்கை என்ற பெயரை மாற்றி ”சிங்ஹலே” என்ற பெயர் மாற்றம் - பொதுபல சேனா

லங்கை பல்லினங்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கி எறிந்து பௌத்தர்களுக்கு மாத்திரமே சொந்தம் என்று ஏற்றுக்கொண்டு இலங்கை என்ற பெயரை மாற்றி ”சிங்ஹலே” என்ற பெயர் மாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறு பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிலந்த விதானகே கூறியுள்ளார்.

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பொதுபல சேனாவின் சங்க சம்மேளனத்தின் மகாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுகளின் மதங்களையும், உதவிகளையும் தடை செய்ய வேண்டும்.

அரசியல்வாதிகளின் சுய நலங்களுக்காக பல மதத்தவர்கள் வாழும் நாடு என்றும் பலவித அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர். இந்த மாயை தடுக்கப்படல் வேண்டும்.

சிங்கள பௌத்த நாடு என்றும் இங்கு ஒரே இனம், ஒரே சட்டம் என்ற கொள்கை அமுல்படுத்த வேண்டும் இராஜ்யத்தின் மதத் தலைவராக சங்கராஜ மகா நாயகரை நியமித்து அவர் தலைமையில் 50 பேர் அடங்கிய பௌத்த குருமார் குழுவை நியமிக்க வேண்டும்.

இந்த குழுவே அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுவாக நியமிக்கப்படல் வேண்டும். இவ்வாறு வலியுறுத்தும் தீர்மானங்களை பொதுபல சேனா தனது மகா நாட்டில் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.

பொதுபல சேனாவின் புதிய தீர்மானம்- சிறுபான்மை இனங்கள் எதிர்ப்பு

இலங்கையர் அனைவரும் தம்மை சிங்களவர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டுமென பொதுபல சேனா நிறைவேற்றியுள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இலங்கையின் கடும்போக்குவாத பௌத்த அமைப்பான பொதுபல சேனா அண்மையில் கொழும்பில் பிக்குமார் மாநாடொன்றை கூட்டியிருந்தது.

நாட்டின் நாலாபக்கங்களில் இருந்தும் பிக்குமார் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் ஞானசார தேரர்,

இலங்கையர் அனைவரும் தம்மை சிங்களவர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடும் குரலில் வலியுறுத்தியுள்ளார்.

இனிவரும் காலங்களில் தமிழர்கள்,கிறித்தவர்கள், முஸ்லிம்கள் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ள அவர் , அதற்குப் பதிலாக சிங்கள கிறித்தவர், சிங்கள இந்து, சிங்கள முஸ்லிம் என்பதாக அழைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தற்போது சிறுபான்மை இன மக்களின் தலைவர்களின் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, எந்தவொரு இனமும் தங்கள் அடையாளத்தை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பொது பல சேனாவின் மாநாடு அரச ஆதரவுடன் நடைபெற்ற தீவிரவாதிகளின் மாநாடு என்றும் அவர் சாடியுள்ளார்.

கிறித்தவ சகவாழ்வு மன்றத்தின் தலைவர் அருட்தந்தை மாரிமுத்து பிள்ளை சக்திவேல் பொது பல சேனாவை மதத் தீவிரவாதிகள் என்று வர்ணித்துள்ளார்.

இலங்கையில் வாழும் ஏனைய இனங்களின் கலாசார , தனித்துவங்களை அழிப்பதற்காகவே பொது பல சேனா உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்களின் இந்தத் தீர்மானம் அரசின் தீர்மானமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் அரச ஆதரவுடன்தான் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து பொது பல சேனாவை தேர்ந்தெடுக்கவுள்ளதாகவும் ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

அத்துடன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு எதிராகவும் கடுமையான வார்த்தைகளைக் கொட்டியிருந்தார்.

இது தொடர்பில் இதுவரை யாரும் கருத்துக்களை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
tamilwin
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :