குடும்ப அரசியலினால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை- விமல் வீரவன்ச

குடும்ப அரசியலினால் நாட்டுக்கு நன்மை ஏற்படப் போவதில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். முதலில் தந்தை பின்னர் தாய் அதன் பின்னர் மகன் என்ற குடும்ப அரசியல் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

படையினர் உயிர்த்தியாகம் செய்து நாட்டை மீட்டெடுத்தது, பிரதேச அரசியல்வாதிகளின் குடும்பங்களை போசிப்பதற்கு அல்ல. பிரதேச அரசியல்வாதிகளின் நலன்களை கருத்திற் கொண்டு புலிகள் தோற்கடிக்கப்படவில்லை.

அரசாங்கத்துடன் எங்களுக்கு முரண்பாடு உண்டு. கிடைப்பதனை சாப்பிட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டமல்ல நாம். புலிகளை போரின் மூலம் தோற்கடிக்க முடியாது என குறிப்பிட்ட காலத்தில், புலிகளை தோற்கடித்து நாட்டை ஒன்றிணைக்க முடியும் எனத் தெரிவித்தோம்.

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க வேண்டும். ஊவா மாகாணசபைத் தேர்தலில் புதிய தீர்மானம் ஒன்றை மக்கள் எடுக்க வேண்டும். பழைய கட்சிகளுக்கு தெரிந்த முகங்களுக்கு வாக்களிப்பதனை தவிர்த்து, புதியவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்க வேண்டுமென விமல் வீரவன்ச கோரியுள்ளார்.

ஊவா பரணகம பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.தவி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :