பொதுபல சேனா அச்சுறுத்தல்: முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு

பொதுபல சேனா அச்சுறுத்தல்கள் குறித்து முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் முறைப்பாடு செய்துள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அச்சுறுத்தல் விடுத்தார் என முஸ்லிம் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.

அதேவேளை ஜனாதிபதிக்கு எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் ,இந்த ஆண்டு பேருவளை அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட அவலங்களையும் கருத்திற்கொள்ளாது கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில கடும்போக்குடைய தரப்பினர் தொடர்ச்சியாக குரோத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சட்டத்தால் தண்டிக்கப்படதாத நிலையே தொடவதாகவும் முஸ்லிம் கவுன்சில் குற்றம் சுமத்தியுள்ளது. .

969 பௌத்த கடும்போக்குடைய அமைப்பின் தலைவர் அசீன் விராதுவை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என முஸ்லிம் கவுன்சில் கோரியிருந்தது. சீன் விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்வதனை தடுக்க முஸ்லிம் பேரவைக்கு உரிமை கிடையாது என ஞானசார தேரர் நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு பேருவளை அளுத்கம பிரதேசங்களில் ஏற்பட்ட அவலங்களையும் கருத்திற்கொள்ளாது கலகொடத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சில கடும்போக்குடைய தரப்பினர் தொடர்ச்சியாக குரோத பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் சட்டத்தால் தண்டிக்கப்படதாத நிலையே தொடவதாகவும் அதில் முஸ்லிம் கவுன்சில் தெரிவித்துள்ளது.

புனித குர்ஆன் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பு, பிழையானதும் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்து வருகின்றது.

புனித குர்ஆன் தொடர்பிலான ஞானசார தேரரின் விமர்சனங்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றிலும், பௌத்த சாசன அமைச்சின் சமய விவகாரப் பிரிவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லிம் பேரவை ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமது அமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டு வருவதாக முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :