மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்
சிறுவர் சமவாயம் 1989 நவம்பர் மாதம் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. வரலாற்றில் மிக அதிகமான நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை இதுதான். சிறுவர்களி;ன் குடியுரிமை, சுதந்திரங்கள், குடும்பச் சூழ்நிலைகள், அடிப்படை உடல்நலம், பொது நலம், கல்வி, ஓய்வு மற்றும் கலாசார செயற்பாடுகள் ஆகியவற்றில் இச்சமவாயம் அக்கறை காட்டுகிறது.
இச்சமவாயத்தில் 54 உறுப்புரைகள் காணப்படுகின்றன. இலங்கை 1991ம் ஆண்டு இதில் கையெழுத்திட்டது. சிறுவர் உரிமை சமவாயம் உலகின் அனைத்து சிறுவர்களுக்கும் பொருத்தமானது. அச்சமவாயத்தில் கையெழுத்து வைத்துள்ள அனைத்து நாடுகளும் அதன் உறுப்புரைகளை மதித்து நட்பதே அவர்களது கடமையாகும்.
சிறுவர் உரிமைகளின் மிகவும் பிரதான பகுதிகள் நான்காக அமையும். உயிர் வாழ்தல், அபிவிருத்தி, பாதுகாப்பு, பங்குபற்றல் என்பவைகளாகும.; 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் அனைவரும் சிறுவர்களென ஜக்கிய நாடுகள் சிறுவர் சமவாயத்தின் குறிப்பிடப்படுகின்றது. சிறுவர்கள் பாதுகாப்பிற்கும், அன்பிற்கும், கௌரவத்திற்கும் உரித்தானவர்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாலியல் தொந்தரவுகள், துஸ்பிரயோகங்கள், பாலியல் பலாத்காரங்கள் மற்றும் படுகொலைகள் நாளுக்கு நாள் நடந்தேறுகின்றது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிகமான சிறுவர்கள் பெற்றோர்களி;ன் பிரிவாலும். தாய்மார் மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்;பிற்கு செல்கி;ன்ற போதே பிள்ளைகள் நடு;த்தெருவி;ற்கு வருகின்றனர்.
தாய் இல்லாது போனால் அவ்விடத்தை தாயாய் தந்தையாய் நிரப்ப வேண்டிய தந்தையர் கவலையீனமாக இருப்பதுவும,; போதை வஸ்துக்கு அடிமையாகி;ப் போவதும் நம் நாட்டில் காணக்கூடியதாக இருக்கி;ன்றது. இதனைப் பயன்படுத்தி எம் இளம் சிறார்களை பிறர் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகிக் வருகின்றனர்.
சிறுவர்கள் என்போர் ஒரு வாகனத்தைப் போன்றவர்கள் அதை நாம் ஓட்டிச் செல்வதாலும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும்தான் தங்கியுள்ளது. மாறாக கொஞ்சம் அசந்தாலுத் நம்மை வீழ்த்திவிடும். என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக பி;ள்ளைகள் திசைமாறி;ப் போகவும் எதிர்காலத்தில் பாசமில்லாமல் எம் சொல் கேட்காமல் அவர்கள் இருப்பதற்கு தவறான குடு;மப்பப் பி;ன்னணி;களே காரணமாகும்.
ஒரு சிறுவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவது, ஒருவரைத் துன்புறுத்தும் செயலாக சட்டம் கருதுகிறது. ஒரு பிள்ளையை சொற்களின் மூலமாக அல்லது வேறொரு விதத்தில் பாலியல் இம்சைக்குள்ளாக்குதல் குற்றம் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஒவ்வொருவரும் கல்விபெற உரிமை உண்டு. தொடக்க நிலையிலேனும் அது எல்லோருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். மனித உரிமைகள் விடயங்களைக் கண்டறியவும் கல்வி அடிப்படைத் தேவையாகவுள்ளது.
உலகில் 10 முதல் 15 கோடி வரை தெருச் சிறுவர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டு;ள்ளது. இவர்களில் 5 – 10 சதவீதம் பேர் தங்களது குடும்பங்களால் கைவிடப்பட்டவர்களாகவோ, குடு;ம்பங்களை விட்டு ஓடிவந்தவர்களாகவோ இருப்பர்.
உலகில் ஐந்து வயதுக்கு கீழ்பட்ட சிறார்கள் ஒரு கோடிப் பேர் ஓராண்டுக்குள் மரணமடைகின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் காப்பாற்றக்கூடிய நோய்களிலும், ஊட்டச் சத்தின்மையாலும் பாதிக்கப்பட்டோர் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகிறது.
சிறுவர்கள் உரிமைகள் சம்பந்தமாக சட்டங்களும், கொள்கைகளும் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பன இருக்கின்ற போதும். சிறுவர்கள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றமையும் தொழில்களிற்கு அமர்த்தியிருப்பதைம் காணக்கூடியதாகவுள்ளது. சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அரசும், பொதுமக்களும் சட்டரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும் கடமைப்பட்டுள்ளனர்.
வாழ்வின் உண்மை நிலைகளை உணர்த்தி வாழவைக்க வேண்டியது பெற்றோர்களாகிய எமது கடமை. நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் ஆக்கிவிடுவோமாக.

0 comments :
Post a Comment