பெரும்பாண்மை மக்களோடு தமிழ், முஸ்லீம் மக்களும் சகல உரிமைகளுடன் வாழக்கூடிய உரிமை உண்டு- பிரதமர்

அஷ்ரப் ஏ சமத்-

டந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் தலைமையில் நடைபெற்ற கல்விபற்றிய கலந்துறையாடலில் இந்த நாட்டில் உள்ள சகல சிங்கள பாடசாலைகளில் தமிழைக் கற்பிப்பதற்கு தமிழ் ஆசிரியர்களும், தமிழ் பாடசாலைகளில் சிங்களம் கற்பிப்பதற்கும் சிங்கள ஆசிரியர்களையும் மற்றும் ஆங்கிலப் பாடத்தையும் கற்பிபதற்கும் கூடுதலான ஆசிரியர்களை நியமிபிப்பதற்கும் ஒரு புதிய திடட்த்தினை அமுல்படுத்தும்படி கல்வியமைச்சர் மற்றும் மாகாண கல்வி அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆகவே எதிர்காலத்தில் இனங்களுக்களுக்கிடையே தமது மொழி, மத கலாச்சார பாரம்பரியங்களை பகிர்ந்து கொள்வதில் மொழிப்பிரச்சினை ஓர் அளவில் பூர்த்திசெய்யப்படும். என நம்புவதாக பிரதம மந்திரி தி.மு. ஜயரத்தின தெரிவித்தார்.

மேற்கண்டவாறு நேற்று சனிக்கிழமை (19)ஆம் திகதி - பிரதம மந்திரி தி.மு. ஜயரத்தின இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த 'திருவாதவூரரும் சைவத்திருநெறியும்' எனும் 3 நாள் இந்து சமய மாநாட்டின் 2ஆம் நிகழ்வின் பிற்பகல் நிகழ்ச்சிகளில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வுகள் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இந்துசமய அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி சாந்தி திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்று வருகின்றது.

இந் நிகழ்வில் தமிழ் நாடு, மலேசியா மற்றும் இலங்கையில் உள்ள பல்கலைழக்கழகங்களின் கடமையாற்றும் பேராசரியர்கள் மற்றும் தமிழ் நாடு இசை வித்துவாண் திருதனி சுவாமிநாதனின் இசைக் கச்சேரியும் மலேசிய நாட்டின் பரதநாட்டிய நிகழ்ச்;சிகளும் நடைபெற்றது. கலாச்சார திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 3 நூல்களும், மற்றும் இசைக்கச்சேரி இருவெட்டுக்களும் பிரதமரினால் வெளியீட்டு வைக்கப்பட்டது. பிரதம மந்திரியை கௌரவித்து பேராசிரியர் பத்மநாதன் அவர்களினால் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதம மந்திரி –

இலங்கையில் உள்ள பெரும்பாண்மை சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லீம் மக்களும் சகல உரிமைகளுடன் வாழக்கூடிய உரிமை உண்டு. இந்து மதம் இந்தியாவில் இருந்து தான் வந்தது. அதே போன்று இலங்கை ஆணடு சிங்கள அரசன் விஜயன் இந்தியாவிலிருந்து தான் இலங்கை வந்தான். ஆகவே பௌத்த மதத்துக்கும் இந்து மதத்துக்கும் ஒரு பாரம்பரிய ஒற்றுமை உண்டு. பௌத்த மக்களில் அனேகம்பேர் இந்து கோவிலில் வழிபடுகின்றார்கள். அனேக பௌத்த மக்கள் இந்து மதத்தினை அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவர்களது எண்னங்கள் ஆசைகள் நிறைவேறுவதற்கு இந்து கோவிலுக்கு சென்று வழிபடுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. அதே போன்று கதிர்கமாத்தில் நூற்றுக்கணக்கான மைல்கள் தமிழ் பக்தர்கள் நடந்து வந்து பூஜைகளில்; வழிபடுகின்றார்கள். அதே போன்றுதான் சிங்கள மக்களும் இணைந்து இங்கு வழிபடுவது வழக்கம். அண்மையில் கதிர்காமத்தில் உள்ள இந்துக் கோவிலின் சில நிர்மாண வேலைகளை நான் ஆரம்பித்து அபிவிருத்தி செய்துள்ளேன். அதே போன்று எனது தொகுதியான கம்பளையில் 21 வீத மாணவர்கள் தமிழர்களும், 23 வீதமான முஸ்லீம்களும் 57 வீத சிங்களவர்களும் ;வாழ்கின்றனர்.

 எனது தொகுதியில் உள்ள சகல இந்து கோவிலுக்கும் நான் நிதிஉதவி அளித்து அதனை அபிவிருத்தி செய்துள்ளேன். புதிய இந்துக் கோவிலும் நிறுவியுள்ளேன். அங்கு நான் இருக்கு மட்டும் எந்த சிறுபாண்மை இனத்துக்கும் பிரச்சினைகளை ஏற்பாடாது பாதுகாத்து வருகின்றேன். ஜனாதிபதி அவர்கள் அண்மையில் நடைபெற்ற யுத்தத்தின்போது எல்.எல.ஆர்.சி ஆணைக்குழுவை நிறுவி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை பணித்துள்ளார். அதன் முலம் தமிழ் ;மக்களுக்கு அநீதி நடைபெற்று இருந்தால் அதனை பரீசிலித்து அதற்குரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பார். இந்த நாட்டில் வாழும் பொளத்த மக்கள் அணைவரும் நல்லவர்கள். அதில் ஒரு சிலர்தான் சிறுபாண்மையை நசுக்குவதற்கும் அவர்களை தூண்டுவதற்கும் இனக்குரோத கொண்டவர்களும் உள்ளனர். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களில் 15 இலட்சம் தமிழர்கள் வடகிழக்கில் வாழ்கின்றனர். 

ஏனைய 15 இலட்சம் தமிழ் மக்களும் ஏனைய பிரதேசங்களில் இரு இனங்களுடன் பின்னிப்பிணைந்து வாழ்கின்றனர். அண்மையில் ரீ.என்.ஏ தலைவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் இந்த நாட்டை ஒருபோதும் பிரிக்க நாம் துணைபோகமாட்டோம் என தெரிவித்திருந்ததை நான் பத்திரிகை வாயிலாக அறிந்தேன். இது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கின்றது. மேலைத்தேய நாடுகளில் சில பிரித்து வைக்கப்பட்ட நாடுகளில் நாளாந்தம் மணித படுகொலைகளும் கலவரங்களும் நடந்தவண்னே உள்ளது. நாம் அணைவரும் இலங்கையர்கள.; என்ற தொணியில் இந்த நாட்டை கட்டியெழுப்புவோமாக என பிரதம மந்திரி தி.மு ஜயரத்தின அங்கு கூறினார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :