பைஷல் எம் இஸ்மாயில்-
வீட்டுச் சூழலை மகிழ்ச்சிகரமானதாக்க பெற்றோர்களது திறன்விருத்தி' தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை (18) அட்டாளைச்சேனை பிரதேச சகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பிரதேச செயலகம், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் என்பன இணைந்து இந்த விழிப்புணர்வு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது.
பிரதேச கற்பினி தாய்மார்கள் மற்றும் அவர்களது கனவன்மார், பிரதேச மருத்துவ மாதுக்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த நிகழ்வில் பயனாளிகளாக கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.ஏ.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உளவளத்துணை வைத்திய அதிகாரி டாக்கடர் எம்.ஜே.எம்.நௌபல் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டதுடன் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மற்றும் உளவளத்துணை உத்தியொகத்தர் யூ.எல்.அஸாருடீன், சமூக சேவை அதிகாரி எம்.ஐ.எம்.அன்வர் ஆகியொர் கலந்து கொண்டனர்.
இதன் போது பெற்றோர்களின் இயலளவை அதிகரித்தல், சிறுவர்களை துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பளித்தல், வீட்டுச் சூழலை வகைப்படுத்தல், மனவழத்தம் மற்றும் கோபத்தை குறைத்தல், கட்டுப்படுத்தல், சிறுவர் துஷ்பிரயோகத்தின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளிக்கப் பட்டது.
.jpg)



0 comments :
Post a Comment