பைஷல் இஸ்மாயில்-
அட்டாளைச்சேனை - ஒலுவில் பிரதேச மீனவர்களின் மிக முக்கியமான பிரச்சனை தொடர்பான கலந்துரையாடல் நேற்றிரவு (13) 10 மணியளவில் ஓலுவிலில் இடம்பெற்றது.
மீனவர் சங்கத் தலைவர் ஐ.எல்.எம்.யாசீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபை உதவி தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளா ஆகியோர் கலந்து கொண்டு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தனர்.
ஒலுவில் பிரதேசத்தில் உள்ள கடற்றொழில் மீனவர்கள் தங்களின் துறைக்கு மின்சாரம் மலசல கூடம் குடிணீர் போன்ற வசதிகள் இல்லை எனவும் இவ்வசதி வாய்ப்பினை மிக விரைவில் செய்துதர வேண்டும் எனவும் தங்களின் பிரச்சினைகளை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரிடம் முன் வைத்தனர்.
மீனவர்களின் இப் பிரச்சினையை ஏற்றுக் கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் கூறுகையில்
கடலுக்குச் சென்றுவரும் மீனவர்களுக்கு மிக அத்தியவசியமாக காணப்படும் தேவைப்பாடாக இருக்கின்ற விடயமாகும். உங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையை மிக விரைவில் செய்து தருவதாகவும் அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வேன் என உறுதியளித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment