த.நவோஜ்-
தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் சட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான நடமாடும் சேவையானது பனிச்சங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றது.
வாகரை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் வே.நவிரதன் தலைமையில் பனிச்சங்கேணி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கான நடமாடும் சேவை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டத்தில் நடைபெற்றது.
இந் நடமாடும் சேவையின் போது மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கிராம சேவை உத்தியோகத்தர் ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந் நடமாடும் சேவையின் போது அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு திணைக்களங்களின் மூலம் தமது சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
வறுமைக் கோட்டின் கீழ் வாழும் எமது பிரதேச மக்கள் தவறாது இச்சேவையினை பெற்றுக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்வதோடுää இதேபோன்ற இச்சேவைகளை பல கிராம சேவையாளர் பிரிவுகளை உட்படுத்தி நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என வாகரை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் வே.நவிரதன்; தெரிவித்தார்.
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment