ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை கடையடைப்பு போராட்டம்



த.நவோஜ்-

செங்கலடி பிரதேச வர்த்தகர்கள் செங்கலடி ஏறாவூர்பற்று பிரதேச செயலாளரின் இடமாற்றத்தை கண்டித்து இன்று திங்கட்கிழமை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதரின் இடமாற்றத்தை கண்டித்தும்ää அதனை தடுத்து நிறுத்தக் கோரியுமே மேற்படி கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கடந்த ஒன்றறை வருடங்களாக செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் பிரதேச செயலாளர் ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் உள்ளிட்ட பல இடங்களை புனரமைப்பு செய்துள்ளதுடன்ää ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தை மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முதலிடம் பெறக்கூடிய பிரதேச செயலகமாக மாற்றியுள்ளதால் இவரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி வர்த்தகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :