த.நவோஜ்-
திருகோணமலை குச்சவெளிப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கோணேசபுரியில் பார்ப்போரை வியக்க வைக்கும் தேசிய அருங்கலைப் பேரவையின் கடதாசிப் பொம்மை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை கிழக்குப் பல்கலைக் கழக வளாகத்திற்கு செல்லும் பிரதான பாதையில் கோணேசபுரி எனும் இடத்தில் அமைந்துள்ள தேசிய அருங்கலைப் பேரவை கடதாசிப் பொம்மை நிலையத்தில் பத்திரிகைக் கடதாசிகள், கழிவுக் கடதாசிகள், கோதுமை மா, வெள்ளைப் பவுடர் என்பவற்றை மூலப்பொருளாக கொண்டு வர்ணம் பூசும் பம்பியின் மூலமாக இயற்கையை ஒத்த அமைப்புடைய மாம்பழம், தோடம்பழம், அன்னாசி, அப்பிள், திராட்சை, முந்திரிகை, கொக்கோ பழம், கரட், வெண்டி, செவ்விள நீர், வாழைப்பழம், அன்னாசி, கத்தரி, பாகற்காய், இவை தவிர றே தட்டு, தேனீர் குவளைகள், நீர்ச்சாடி, பூச்சாடி, உண்டியல்கள் என்பன தயாரிக்கப்பட்டு வருகின்றன.
பாரம்பரிய மற்றும் சிறுகைத் தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் இந்த தேசிய அருங்கலைப் பேரவையின் கடதாசிப் பொம்மை நிலையம் பொறுப்பாசிரியர் திருமதி.செல்வநாயகி ராமச்சந்திரனின் வழிகாட்டலின் கீழ் கே.சிந்துஜா, எஸ்.அந்தோனியம்மா, கே.இந்துமதி, கே.தவமலர் ஆகிய பயிலுனர்களைக் கொண்டு இவ்வாறான பொருட்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
இவை பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் வியப்பிற்கும் உள்ளாக்கிறது. இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்யவிரும்புபவர்கள் 0774667935 எனும் இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்த முடியும்.
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment