ஒரு மாணவியின் எதிர்காலத்தை சூனியமாக்கிய பாடசாலை அதிபர்!

ர்ஷி சித்மினி சந்தநாயக என்ற ஐந்தாம் தரத்தில் கல்வி பயிலும் பத்து வயதான பாடசாலை மாணவியின் தலையில் குட்டுமாறு உத்தரவிட்டதாக சந்தேகிக்கப்படும் பொலன்னறுவை, பக்கமுன, தியபெடும வித்தியாலயத்தின் அதிபரான உடுதென்னேகெதர பிரேமரத்னவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளது.

குறித்த மாணவி வகுப்பறையைச் சுத்தம் செய்யவில்லை என்ற காரணத்துக்காக அதே பாடசாலை மாணவர்களைக் கொண்டு மாணவியின் தலையில் குட்டுவதற்கு இவர் உத்தரவிட்டமை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த மாணவி பாதிகப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது வீடு திரும்பியுள்ளார்.

இந்த மாணவியின் தாய் இது தொடர்பில் தெரிவிக்கையில், எனது மகளின் தலையில் சுமார் பத்து மாணவர்கள் குட்டியுள்ளனர். அவர் அழுது கொண்டே வீடு வந்து நடந்த விடயத்தைக் கூறினார். அத்துடன் தனக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். எனது மகள் ஆகஸ்ட் மாதம் பரீட்சை எழுதவுள்ளார். ஆனால், அவள் தான் இனிமேல் பாடசாலைக்குச் செல்லமாட்டேன என அடம்பிடிக்கிறாள். எனது மகளின் தலையில் குட்டிய மாணவர்கள் தங்களது அதிபர் கூறியதற்காகவே .இவ்வாறு செய்தோம் என கூறினர். இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த அதிபரைக் கைது செய்து பொலிஸார் நீதிமன்றில் ஆஜர் செய்த போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

தமிழில்: ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

சிங்களத்தில்: பண்டாரமுதியன்ஸே, காமினி ஒபயசேகர
(கொஸிப்லங்கா நியுஸ்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :