மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பொலிஸ் பிரிவில் மயான வீதி மருதநகர் எனுமிடத்தில் சிசுவொன்றை புதைத்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடாப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி அருன வீரசிங்க தெரிவித்தார்.
கல்குடா மருதநகர் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கு முதல் பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்து அதை காணிக்குள்ளேயே புதைத்துள்ளார்கள் என்று கல்குடாப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பிள்ளையைப் பிரசவித்த பெண்னும் அவரது தாயும், தம்பியும் கல்குடாப் பொலிஸாரால் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிள்ளையைப் பிரசவித்த பெண்ணின் சகோதரரின் மனைவியே மேற்படி சம்பவம் தொடர்பாக கல்குடாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும், சந்தேக நபர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாவும் கல்குடாப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி அருன வீரசிங்க தெரிவித்தார்.
புதைக்கப்பட்ட சிசுவின் சடலம் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மற்றும் நீதவான் ஆகியோர் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாகவும், அது வரை கல்குடாப் பொலிஸார் குறிப்பிட்ட இடத்தை பாதுகாத்து வருவதாகவும் கல்குடாப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி அருன வீரசிங்க மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment